அது மட்டுமல்ல, கடற்கரையில் துப்புரவு செய்கின்ற போது, சிலர் அவர்களுக்கு உதவி செய்கின்றனர். Zhang Guang Li கூறியதாவது:
"ஒரு நாள், நான் குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்திய போது, 30 வயதான இளைஞர் ஒருவர் வந்தார். உங்களுக்கு உதவி செய்யட்டுமா? என்று கூறிக் கொண்டே குப்பைகளை அகற்ற எனக்கு உதவினார்" என்றார், அவர்.
இவ்வேலையில் ஏற்பட்டுள்ள மதிப்பினால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய மக்களின் கருத்து வலுவடைந்துள்ளதாக Zhang Guang Li ஆழமாக உணர்ந்து கொண்டுள்ளார். இதனால் தமது பணியை பற்றி அவர் பெருமை அடைகின்றார். தமது முயற்சிகளின் மூலம் இதர மக்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்பதும், அனைவரும் சுத்தமான, தெளிவான கடலை கூட்டாக பாதுகாக்க வேண்டும் என்பதும், அவரது மிக பெரிய விருப்பமாகும். அவர் கூறியதாவது:
"எங்களது பணி மூலம், கடலைப் பாதுகாக்க உதவி செய்யுமாறு கடற்கரைக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்க விரும்புகின்றேன். அனைவரும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கடல் நீரில் குப்பைகளை வீச வேண்டாம் என அறிவுறுத்துவேன்" என்றார் அவர். 1 2 3
|