
அந்த தொழிலாளர் பெயர் Yan Shou Hai. தமது பணியைப் பற்றி அவர் புன்சிரிப்புடன் கூறியதாவது:
"இங்குள்ள காற்று சுத்தமானது. இயற்கை காட்சிகள் மனதை கொள்ளை கொள்பவை. கடல் மேலும் அழகானது. அதனால் இங்கே தங்கி, வேலை செய்ய தீர்மானித்தேன். சாதாரண நாட்களில், இங்கு வருகின்ற பயணிகள் எனக்கு வணக்கம் தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு Yan Tai பற்றி உற்சாகத்துடன் அறிமுகப்படுத்துகின்றேன். இங்கே வருகின்ற பயணிகள் தத்தமது ஊர்களுக்கு மகிழ்ச்சியாக திரும்ப வேண்டுமென விரும்புகின்றேன். தெளிவான கடல் நீர், சுத்தமான சாலைகள் ஆகியவற்றை இந்நகரில் கண்டு, மகவும் மகிழ்கின்றேன்" என்றார், அவர்.
Yan Shou Hai கூறியதை போல், கடல், மக்களை கவலை மறக்கசெய்யக்கூடியது. பணியில் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்.
துப்புரவு தொழிலாளர்களைப் பொறுத்த வரை, சாதாரண துப்புரவுப் பணி கடினமாகயில்லை. ஆனால், கடலில், வாடைக் காற்று வீசும் போது, பெரிய அலைகளால், கடல் மணல் கரையில் வீசப்படுகின்றது. கடல் மணலை அகற்றுவது மிக கடினமானது.
Zhang Guang Li என்னும் தொழிலாளரின் அறிமுகத்தின் படி, சில நாட்களுக்கு முன், கடும் காற்று வீசியது. அலை மிகவும் உயரமாக எழுந்தது. வீசப்பட்ட கடல் மணல், கரையை மூடிவிட்டது. தொழிலாளர்கள், குளிர்காலத்தில் உறைப்பனியை அகற்றுவது போல, முதலில் மணலை ஒன்று குவித்தனர். அதை நான்கு லாரிகளில் ஏற்றி வேறு இடத்துக்கு அனுப்பினர். பகலிலும் இரவிலும் வேலை செய்ததால், அனைவரும் மிகவும் களைப்படைந்தனர். ஆனால் அதிகம் உழைத்ததற்கு யாரும் யார் மீதும் குறை தெரிவிக்கவில்லை என்று Zhang கூறினார். அவர் கூறியதாவது:
"துப்புரவுப் பணியில் நாங்கள் எங்கள் உடலை வருத்தி உழைக்கின்றோம். எனது சக பணியாளர் ஒருவருக்கு வயது 65. எதிர்பாராதவாறு, இளைஞர்களைப் போல் அவர் துப்புரவு செய்கிறார்" என்றார், அவர்.
துப்புரவுப் பணி கடினமாக இருந்த போதிலும், Yan Tai நகரின் Bin Hai சதுக்கத்தில் வேலை செய்யும் துப்புரவு தொழிலாளர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஏனென்றால், அவர்களின் பணிக்கு மக்கள் மிகவும் மதிப்பு அளிக்கிறார்கள். குப்பைகளைத் திரட்டும் பணி மிகவும் கடினமானது என்பதை கண்டப் பின், குப்பைகளை விருப்பப்படி வீசியதிலிருந்து மக்கள் படிப்படியாக மாறியுள்ளனர் என்று Zhang கூறினார்.
1 2 3
|