• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-30 09:26:05    
நளபாகம் ஆ

cri

நல்ல கைப்பகுவமும், மதிநுட்பமும் நிறைந்த சமையல் கலைஞர்கள் பலர், ஆட்சியிலிருந்தோருடன் எளிதாக தொடர்பு கொண்டிருந்தததை சீன வரலாற்றில் நாம் காணமுடியும். சமையல்காரர் என்று ஒதுக்கிவிடும் அளவுக்கு அவர்களது ஆற்றலும், விச்சும், திறனும் இருக்கவில்லை. தாங்கள் செய்யும் உணவை வைத்தே அவர்கள் தங்களது இருப்பையும், மதிப்பையும் உயர்த்திக்கொண்டனர். இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, சீனாவின் முதல் தலைமையமைச்சர் என்று கருதப்படும் யி யின் (Yi Yin). புகழ்பெற்ற சமையல் கலைஞரான அவர், ஷியா வம்சத்தின் கடைசி ஆட்சியாளரான ச்சியேவை வென்றழித்து, ஷாங் வம்சத்தை தோற்றுவிக்க பேரரசர் தாங்கிற்கு உதவியவர் என்பது வரலாறு. தலைமையமைச்சராக மாறுவதற்கு முன் அடிமையாக, ஒரு சமையல் கலைஞராக மட்டுமே இருந்தவர்தான் இந்த யி யின். பேரரசர் தாங்கின் மனதில் இடம்பிடிக்க அப்படி என்ன செய்தார் இந்த எளிய சமையல் கலைஞர் என்று கேட்கிறீர்களா? சுவையான உணவுகளை செய்து பரிமாறியே அவர் பேரரசரின் மதிப்பை பெற்றாராம். யி யின் சமைத்த உணவையும், அவரது நன்னடத்தையையும் கண்டே, அவருக்குள் தெரிந்த தூதாண்மை திறனையும், மக்கள் தொடர்பு ஆற்றலையும் பேரரசன் தாங் கண்டுகொண்டாராம்.
1 2 3