
சீன வரலாற்றின் பல நூற்றாண்டுகால வளர்ச்சிப்போக்கில், அரசியல் பணியிலும் ஈடுபட்ட பல சமையல் கலைஞர்கள் இருந்துள்ளனர். கிமு 21ம் நூற்றாண்டின் தொடக்கக்காலத்தில் பேரரசர் யாவின் தலைமை சமையல் கலைஞராக இருந்தவர் பெங் ட்சூ (Peng Zu). இவரே சீன சமையற்கலையின் நிறுவுனர், தொடக்கம் என்று அழைக்கப்படுகிறார். அதேபோல், யி யா என்ற சமையல் கலைஞர், வசந்தம் மற்றும் இலையுதிர்கால காலக்கட்டத்தில் ச்சி நாட்டு தலைவனுக்கு மிக நெருக்கமான நபராக இருந்தாராம். இளவரசர் ஹுவான் யி யாவை நமபகமான நபராக ஏற்றுக்கொள்ளக் காரணம், யி யாவின் சிறந்த சமையற்கலையும், சுவைகளை கண்டறியும் திறனுமே. ஷியா வம்சத்தின் ஏழாவது பேரரசரான ஷௌ காங், முன்னதாக ஷியா வம்சம் நிறுவப்படுவதற்கு முன் யோயுஷுவுக்கான சமையல் மற்றும் உணவுச்சேவைக்கு பொறுப்பான அதிகாரியாக இருந்தவராம்.
1 2 3
|