
ஆனால் இப்படி எல்லா சமையல் கலைஞர்களும் அதிகாரத்தை, அதிகாரத்துடன் தமக்கிருந்த தொடர்பை நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்தவில்லை. ஒரு சிலர் தீய எண்ணமும், கொடிய நோக்கமும் கொண்டவர்களாக இருந்தனர். ஷுவான் ஷு (Zhuan Zhu) என்ற சமையல் கலைஞர்
வசந்தம் மற்றும் இலையுதிர்கால காலக்கட்டத்தின் பிற்பகுதியில், வூ நாட்டின் கொலையாளியாக, கொலைபாதகச் செயல் செய்யும் நபராக இருந்தாராம். இளவரசன் குவாங்கின் வெற்றிக்காக, அவனது ஆட்சிக்கு வழிகோலுவதற்காக தம் சமையல் கலையையே கொலை செய் ஆயுதமாக்கினாராம் ஷுவான் ஷு. மீன் வறுவலின் ஒரு தனிச்சிறப்பு சமையல் நுட்பத்தை கற்ற ஷுவான் ஷு, கைவந்த கலையான தனது சமையல் நுட்பத்தையும், திறனையும் பயன்படுத்தி வூ நாட்டின் இளவரசன் லியாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்று அவனை கொன்றாராம். 1 2 3
|