2008ம் ஆண்டு, அமெரிக்க வீடு மற்றும் நிலச் சொத்துக்கான கடன் பிரச்சினையால், உலக நிதி நெருக்கடி நிகழ்ந்தது. உலக நிதி நெருக்கடி மற்றும் இயற்கை சீற்றம் ஏற்பட்ட போதிலும், பொருளாதார கட்டுப்பாட்டுக் கொள்கையை சரிப்படுத்தி, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வெற்றிகரமாக நடத்தி, உலக பல்வேறு நாடுகளுடன் சேர்ந்து நிதி நெருக்கடியைச் சமாளிப்பதில், சீனா முக்கிய பங்காற்றியுள்ளது. அதனால்தான், உலகின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறது.
சீன பொருளாதாரம் நன்றாக வளர்வதாலும், சர்வதேச நிதி நெருக்கடியையும் சமாளிப்பதில், சீனாவின் ஆக்கப்பூர்வமான மனப்பான்மை வெளிப்படுவதாலும், சர்வதேச சமூகத்தில் பொதுவாக சீனா ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தற்போதைய நிதி நெருக்கடியை சமாளிக்கும் இன்றியமையாத ஆற்றலாக சீனா மாறியுள்ளது. சீன பொருளாதாரம் தொடர்ந்து சீராக வளர்வது, முழு உலகத்துக்கு நன்மை பயக்கும் என்று ஸ்லோவேனிய அரசுத் தலைவர் danilo turk அக்டோபர் திங்கள், பெய்ஜிங்கில் நடைபெற்ற ஆசிய-ஐரோப்பிய உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:
உலக பொருளாதாரத்தின் முக்கிய சக்திகளில் ஒன்றாக சீனா விளங்குகின்றது. எனவே, முதலில், சீன பொருளாதாரம் தொடர்ந்து அதிகரிப்பதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். சீன பொருளாதாரத்துக்கு நலன் தருவது, உலகத்துக்கும் துணை புரியும் என்று நாங்கள் கருதுகின்றோம். எடுத்துக்காடாக, ஐரோப்பாவை பொறுத்தவரை, சீனாவில் தொடர்ந்து விரிவாகும் சந்தையிலிருந்து, நாங்கள் நலன்களைப் பெறலாம் என்று அவர் கூறினார்.
2008ம் ஆண்டு, உலக நிதி நெருக்கடி இயற்கை சீற்றம், நிலநடுக்க மற்றும் பேரிடர்கள், சீன பொருளாதாரத்துக்கு பாதிப்பு கொண்டு வந்துள்ளதோடு, மறக்க முடியாத பல அற்புதமான நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 2008ம் ஆண்டு, ஆக்ஸ்ட் திங்கள் 8ம் நாள், சீன நாட்டின் பொது மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றப் படி, 29வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பெய்ஜிங் மாநகரில் வெற்றிகரமாக நடைபெற்றது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்த விண்ணப்பித்தது முதல், அதனை வெற்றிகரமாக நடத்தியது வரையான 7 ஆண்டுகாலத்தில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடு, சீன பொருளாதாரத்துக்கு முன்கண்டிராத வாய்ப்புகளைக் கொண்டு வந்துள்ளது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தியதன் மூலம், பல தொழில் துறைகள் பெரிதும் வளர்ந்து வருகின்றன.
1 2 3
|