2008ம் ஆண்டு, உலக பொருளாதார சூழலில் ஏற்ப்பட்ட சிக்கலான மாற்றங்கள் மற்றும் இயற்கை சீற்றம் போன்ற அறைகூவல்களை சீன பொருளாதாரம் எதிர்நோக்கியது. ஆனால், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவதன் மூலம், சீன பொருளாதாரம் பெரிதும் முன்னேறியுள்ளது. சீன பொருளாதாரம் சீராக வளரும்போக்கு இன்னும் அசையவில்லை. இருந்த போதிலும், தற்போதைய நிதி நெருக்கடியால், மேலதிகமான நிதானமற்ற காரணிகள் சீன பொருளாதாரத்தில் இடம் பெறுகின்றன. எனவே, சீன பொருளாதார வளர்ச்சி, பல சிக்கல்களையும் அறைகூவல்களையும் எதிர்நோக்கி வருகின்றது.
பொருளாதாரம் நிதானமாக வளர்வதை உத்தரவாதம் செய்யும் கொள்கையளவிலான கண்ணோட்டம் குறித்து, சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவ் அக்டோபர் திங்கள் நடைபெற்ற ஆசிய-ஐரோப்பிய உச்சிமாநாட்டில் தெளிவாக விளக்கிக் கூறினார். இது குறித்து, அவர் கூறியதாவது:
சீனா, 130 கோடி மக்கள் தொகை கொண்ட வளரும் நாடாக விளங்குகின்றது. சீன மற்றும் உலக பொருளாதாரங்களுக்கு இடையில் தொடர்பு மேன்மேலும் நெருக்கமாக மாறி வருகிறது. உலக நாணய சந்தையின் நிதானம் மற்றும் உலக பொருளாதார வளர்ச்சிக்கு, சீன பொருளாதாரம் சீராக வளரும் போக்கை நிலைநிறுத்துவது முக்கிய பங்காற்றி வருகிறது. இதற்காக, முதலில், உள்நாட்டு விடயங்களை நன்றாக கையாள வேண்டும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பொருளாதார நிலைமையின் படி, ஒட்டுமொத்த கட்டுப்பாட்டை வலுப்படுத்த வேண்டும். உரிய நேரத்தில் கொள்கைகளை சரிப்படுத்தி, உள்நாட்டுத் தேவை, குறிப்பாக நுகர்வுத் தேவையை முக்கியமாக விரிவாக்கி, பொருளாதார, நாணய மற்றும் முதலீட்டுச் சந்தையின் நிதானத்தை நிலைநிறுத்த வேண்டும். சமூகப் பொருளாதாரம் சீராகவும் விரைவாகவும் வளர்வதை தொடர்ந்து முன்னேற்ற வேண்டும் என்று ஹூசிந்தாவ் தெரிவித்தார்.
1 2 3
|