பொருளாதாரம் நிதானமாக வளரும் குறிக்கோளை நனவாக்கும் வகையில், தொடர்புடைய பத்து நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொண்டது. 2010ம் ஆண்டின் இறுதிக்குள், 4 இலட்சம் கோடி யுவானை ஒதுக்கிவைத்து, அடிப்படை வசதி, பொது போக்குவரத்து, உயிரினச் சுற்றுச்சூழல் கட்டுமானம், பேரிடருக்குப் பிந்திய மறுசீரமைப்பு, மக்களுடன் நெருக்கமான தொடர்புடைய திட்டப்பணிகள், நகர மற்றும் கிராமப்புற வாசிளின் வருமானம், குறிப்பாக வருமானம் குறைந்த மக்களின் வருமானத்தை அதிகரிப்பது ஆகியவற்றை செய்யவுள்ளது. அதேவேளையில், சீன மத்திய நிதி துறை கூடுதலாக ஒதுக்கிவைத்த 10 ஆயிரம் கோடி யுவான் மதிப்புள்ள முதலீடுகள், தொடர்புடைய திட்டப்பணிகளில் பயன்படுத்தப்பட்டன. இது தொடர்பான சில திட்டப்பணிகள் ஏற்கனவே துவங்கியுள்ளன. இந்த நடவடிக்கைகளின் மூலம், அடுத்த சில ஆண்டுகளில், உள்நாட்டுத் தேவையை பெரிதும் விரிவாக்கி, வேலைவாய்ப்பு பெறுவதை உத்தரவாதம் செய்ய சீன அரசு விரும்புகிறது. நிதி மற்றும் நாணயக் கொள்கை சரிப்படுத்தப்பட்ட பின், வங்கியிகளின் வைப்பு தொகை மற்றும் கடன் வழங்குதலுக்கான வட்டி விகிதத்தையும், மக்களின் வைப்புத் தொகை மற்றும் கையிருப்புத் தொகை விகிதத்தையும் சீன மத்திய வங்கி பல முறை குறைத்துள்ளது. இதன் மூலம், தொழில் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் கடன் வழங்கக் கூடிய மேலதிகமான நிதியை பெற வசதி வழங்கியுள்ளது.
சீன அரசின் நடவடிக்கைகள், அடுத்த ஆண்டு, சீன பொருளாதாரம் சீராக வளரும் முக்கிய காரணிகளாக மாறும் என்று உலக வங்கியைச் சேர்ந்த சீன மற்றும் மங்கோலிய ஆணையத்தின் தலைவர் dudawei கருத்து தெரிவித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது:
சீன அரசின் பத்து நிதி நடவடிக்கைகளுக்கு நாங்கள் வரவேற்பு தெரிவிக்கின்றோம். இந்த பத்து நடவடிக்கைகளால்தான், 2009ம் ஆண்டில், சீன பொருளாதாரம் நிதானமாக வளர உள்ளது என்று அவர் கூறினார். 1 2 3
|