அறிவை வளர்க்கும் இணைய தேடல் அ
cri
 வெளிநாடுகளில் இருந்து தகவலையோ, கடிதங்களையோ, பொருட்களையோ பெற பல நாட்களாக, மாதங்களாக காத்திருக்க வேண்டும் என்ற நிலை இன்று இல்லை. உடனடியாக அல்லது சில நாட்களில் இந்த சேவைகளை நனவாக்க முடிகிறது. உலகில் எந்த மூலையில் இருந்தாலும் நமது தேவைகளை மிக எளிதாக பெற்றுக்கொள்ளும் அளவுக்கு கணினி மற்றும் இணைய வசதிகள் பெருகிவிட்டன. மிகவும் முக்கிய சேவைகளான தகவல் பெறுவது, விளக்கங்கள் தேடுவது, தொடர்வண்டி மற்றும் விமானப் பயணச்சீட்டு, நூலகம், கல்வி போன்றவை இணைய வசதியால் எளிதாகியுள்ளன. இத்தகைய பரிமாற்றங்களை மேற்கொள்ளும் வகையில் வங்கிக்கணக்குகளை இணையம் மூலமாகவே கையாளும் முறைகளை வங்கிகள் அறிமுகப்படுத்தியுள்ளன. 1 2 3
|
|