
தனிநபர், கணினி, தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி ஆகிய சேவைகள் எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டு கிடைக்கும் நிலை இன்று தோன்றிவிட்டது. பல்வேறு சந்தை வாய்ப்புக்கள், விரைவான தகவல் பரிமாற்றம், எளிதான வர்த்தக விண்ணப்பம், பல்வகை தரவுகளை எளிதாக பெறும் வாய்ப்பு, குறையும் தபால் செலவு ஆகியவற்றால் இது அனைவராலும் விரும்பப்படுகிறது. தட்டச்சு செய்துள்ள உள்ளடக்கங்களை காலம் மற்றும் நேரத்திற்கு தக்கவாறு கணினியில் எளிதாக மாற்றிவிடலாம். இணைய வசதியால் மாபெரும் தொடர்பு வலைபின்னலை ஏற்படுத்தலாம். அதன் மூலமே பகிர்வு தொடர்பை ஏற்படுத்தி தொழிலாளர்களிடம் பணிகளை பகிரலாம். கல்வி அறிவு தொடர்பான விளையாட்டுக்கள் மற்றும் திட்டங்கள் பற்றிய அறிவை பெருக்கலாம். கல்வி மற்றும் வியாபார திட்டங்களுக்கான ஆய்வு தகவல்களை பெற்று, நமது நிலைமைக்கு ஏற்றபடி நடைமுறையாக்கி பயன்பெறலாம். ஒரே எண்ணம் மற்றும் விருப்பம் கொண்டவர்களிடம் நமது கருத்துக்களை எளிதாக பகிர்ந்து கொள்ளலாம். கணினியை விட்டு விலகாமலே உலகிலுள்ள எல்லா நாடுகளிலிருந்தும் பொருட்களை வாங்கி குவிக்கும் வசதியும் உள்ளது. இவற்றை கணினி மற்றும் அதில் பெறும் இணையதள இணைப்பின் நன்மைகளாக பார்க்கலாம்.
1 2 3
|