
இவ்வாறு எல்லா வேலைகளையும் அறையிலிருந்தே முடித்துவிட்டால், மனித சமூக உறவிலான பரிமாற்றம், அறிவு வளர்ச்சி மற்றும் முதிர்ச்சி ஆகிய பண்புகள் என்னாவது? என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், இணைய வசதி பெற்றிருக்கும் கணினி மூலம் பல தகவல்களை தேடி பெற்றுக்கொள்ள முடிகிறது. அவ்வாறு தேடும்போது தங்களுக்கு தேவையான விபரங்களை பெற, சரியான சொற்களை பயன்படுத்தி தேடுவதோடு திறக்கப்படும் இணையப்பக்கங்களில் தேவைப்பட்ட தரவுகளை சரியாக பெறுவதும் தனிதிறமையே. அப்படியானால் இணையதளத்தில் தேடுகின்றபோது அறிவு, கூர்மைப் படுத்தப்படுகிறதா? அவ்வாறு இணையதளத்தில் தேடுகின்றபோது மூளையின் செயல்பாடுகள் அதிகமாகிறதா? என்ற கேள்விகள் எழுகிறன.
அண்மையில் அமெரிக்காவில் இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், இணையதளங்களில் தேடுவதால் மனித மூளையின் முடிவுகள் எடுகின்ற, தருக்க வாதம் செய்கின்ற முக்கிய மையங்கள் தூண்டப்படுகின்றன என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக நடுத்தர வயதினர் மற்றும் வயதானவர்களிடம் நடத்தப்பட்ட இவ்வாய்வில் இணையதளங்களில் தேடுகின்ற அனைத்து செயல்பாடுகளும் மூளையின் இயக்கத்தை முன்னேற்றுவதாக, தூண்டுவதாக அறியவந்துள்ளனர். 1 2 3
|