 வாழ்க்கை தரத்தின் உயர்வு, உணவு வகைகளின் கட்டமைப்பிலான மாற்றம் ஆகியவற்றுடன் மக்களின் உடல் தரம் இடைவிடாமல் மேம்பட்டு வருகின்றது. ஆனால், அதேவேளையில், கல்லீரல் கொழுப்பு, உணவு வகைகளுடன் நெருக்கமான தொடர்பு கொண்ட நோய் மென்மேலும் அதிக மக்களைப் பாதித்து வருகின்றது. இது மட்டுமல்ல, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கள ஆய்வின் படி, சீனாவில் குறிப்பாக பெரிய நகரங்களில் குழந்தைகளைப் பாதிக்கும் முக்கிய நோய்களில் ஒன்றாக இது மாறியுள்ளது.
பல்வேறு மருத்துவமனைகளில், பலர் உடல் பரிசோதனையில் கல்லீரல் கொழுப்பு நோய் கண்டுபிடிக்கப்பட்டனர். கல்லீரல் கூடுதலான கொழுப்பு அமிலத்தால் ஏற்பட்ட நோய் இதுவாகும். சீனாவில், நச்சுயிரியால் ஏற்பட்ட கல்லீரல் அழற்சியைத் தவிர்த்த 2வது கல்லீரல் நோயாக இது மாறியுள்ளது. கல்லீரல் சுருக்கத்துக்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும் என்று பொதுவாகக் கருதப்படுகின்றது. புள்ளிவிபரங்களின் படி, 2001ம் ஆண்டு, சீனாவில் கல்லீரல் கொழுப்பு நோய்வாய்ப்பட்டவர் விகிதம் 19.3 விழுக்காடாக இருந்தது. 2003ம் ஆண்டில் இவ்விகிதம் 25.3 விழுக்காடாக மாறியது. நாட்டின் ஒட்டுமொத்த நிலைமையைப் பார்த்தால், கல்லீரல் கொழுப்பு நோய் ஏற்படும் விகிதம் உயர்ந்த நிலையில் உள்ளது. இது மட்டுமல்ல, இது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
1 2 3
|