
கல்லீரல் கொழுப்பு, கடுமையான நோய் அல்ல.
உணவுப் பொருட்களை உட்கொள்ளும் போது கட்டுப்பாட்டுடன் இருந்தாலே போதும். அதாவது அதிகமாக மது குடிக்கக் கூடாது.
உண்மையில், கல்லீரல் கொழுப்பு என்ற நோயின் பின்விளைவு கடுமையானது. தீவிர கல்லீரல் சுருக்க நோய்க்கு இது வழிகோலும். ஏன், கல்லீரல் புற்று நோயை கூட ஏற்படுத்தும். டாக்டர் zhang hong fei கூறியதாவது
கல்லீரல் கொழுப்பு சேர்வது ஒரு தொகுதி நோய்களை ஏற்படுத்தக் கூடும். முதல் கட்டத்தில், கல்லீரல் கொழுப்பு. 2வது கட்டத்தில், கல்லீரல் அழற்சி. பிறகு, கல்லீரல் சுருக்க நோய், கல்லீரல் புற்று நோய் வரலாம். ஆகையால், போதிய கவனம் செலுத்தாவிட்டால், மிகக் கடுமையான கல்லீரல் நோயால் வாழ்க்கை மற்றும் பணி வாய்ப்பை நாம் இழக்கக்கூடும் என்றார் அவர்.
B வகை மீயொலி வரைவுக் கருவி மூலம் கல்லீரல் கொழுப்பு நோய் இருப்பதை உறுதிப்படுத்துவது மிக மலிவான செலவு, வேகமான போக்கு, காயமின்மை ஆகிய மேம்பாடுகளைக் கொண்டுள்ளது. ஆகையால், திட்டப்படி, B வகை மீயொலி வரைவுக் கருவி மூலம் உடல் பரிசோதனை மேற்கொள்வது, கல்லீரல் கொழுப்பைக் கண்டுபிடிக்கும் தலைசிறந்த வழிமுறையாகும்.
இந்த நோய்வாய்பட்டால், என்ன செய்ய வேண்டும்?
முதலில், நோய்க்கான காரணத்தைக் கண்டுபிடித்து, அதற்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, நீண்டகாலமாக அதிக மது குடிக்க விரும்பியவர்கள் இந்த நோய் ஏற்பட்ட பின் மது குடிப்பதை நிறுத்த வேண்டும். கல்லீரல் கொழுப்பு கொண்ட சர்க்கரை நோயாளிகள் பயன் தரும் முறையில் ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவைக்கட்டுப்படுத்த வேண்டும். ஊட்டச்சத்தின்மை கொண்ட நோயாளிகள், உட்கொள்ளும் ஊட்டச்சத்து அளவை குறிப்பாக வெண்புரதம் மற்றும் வைட்டமின் எனும் உயிர்ச்சத்தின் அளவை அதிகரிக்க வேண்டும்.
அடுத்து, உணவு வகைகளின் கட்டமைப்பைச் சரிப்படுத்த வேண்டும். அதிக வெண்புரதம் மற்றும் உயிர்ச்சத்து கொண்ட உணவுப் பொருட்களையும், குறைவான சர்க்கரை மற்றும் கொழுப்பு கொண்ட உணவுப் பொருட்களையும் உட்கொள்ள வேண்டும்.
தவிர, உடற்பயிற்சியின் அளவை உரிய அளவில் அதிகரித்து, உடம்பிலுள்ள கொழுப்பை ஏரியூட்டி குறைக்க வேண்டும். மருத்துவர் சாங் நடு வயதுடையவருக்கு மற்றும் முதியோருக்கு சிறப்பாக நினைவூட்டியதாவது
உடற்பயிற்சி செய்யும் போது, பயிற்சியின் அளவு, வழிமுறை மற்றும் நேரத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும். சுருக்கமாகக் கூறின், நாள்தோறும் 2 முறை உடல் பயிற்சி செய்யலாம். உடல் பயிற்சிக்கு ஒவ்வொரு முறையும் அரை மணி நேரம் போதும். வாரந்தோறும் இத்தகைய முறையில் பயிற்சி செய்தால், கல்லீரல் கொழுப்பைத் தவிர்க்கலாம் என்றார் அவர்.
இது மட்டுமல்ல, உடல் நல உதவிப் பொருட்களை அதிகமாக உட்கொள்ளக் கூடாது என்று டார்டர் சாங் கூறினார். சரியற்ற முறையிலும் அளவிலும் அவற்றை உட்கொண்டால், கல்லீரலின் சுமையை அதிகரிக்கும். இது தவறானது என்று அவர் வலியுறுத்தினார்.
கல்லீரல் கொழுப்பு பயங்கரமான நோய் அல்ல. முன்னதாகவே நோயைக் கண்டுபிடித்து, சிகிச்சை பெற்றால், குணம் அடையலாம். நோய் தடுப்புப் பணி குழந்தை காலத்திலிருந்தே துவங்கப்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 1 2 3
|