
எந்தெந்த மக்கள் இந்தநோய்க்கு எளிதாக ஆளாகின்றனர்? சீன மக்கள் படையின் 302 மருத்துவமனையின் தொற்று நோய் பிரிவைச் சேர்ந்த டாக்டர் zhang hong fei அம்மையார் கூறியதாவது
பல காரணிகளால் கல்லீரல் கொழுப்பு நோய் ஏற்படும். முதலாவதாக, சரியற்ற வாழ்க்கை வழக்கம். எடுத்துக்காட்டாக நம்மில் பலர் அதிகமாகச் சாப்பிட்டு குறைவாக உடற் பயிற்சி செய்கின்றனர். இரண்டாவதாக, மருந்துகளின் பாதிப்பால் ஏற்பட்ட கல்லீரல் பாதிப்பு. தவிர, சில உயிரியல் காரணிகள். எடுத்துக்காட்டாக, நச்சுயிரியால் ஏற்பட்ட கல்லீரல் அழற்சி, இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்றார் அவர்.
சரியற்ற வாழ்க்கை பழக்க வழக்கங்களால் ஏற்பட்ட கல்லீரல் கொழுப்பு, மொத்த எண்ணிக்கையில் சுமார் 80 விழுக்காடு வகிக்கும் என்று டாக்டர் சாங் கூறினார். எடுத்துக்காட்டாக, மது குடிப்பது. மதுவிலுள்ள சாராயம் கல்லீரலின் முதல் கொல்லியாகும்.
கல்லீரல் கொழுப்பு நோய்வாய்பட்டவர்கள் தங்களது உணர்வை எப்படி வர்ணிக்கின்றனர் என்று கேளுங்கள்.
எனது அடி வயிற்று பகுதியில் வயிறு உப்பிசமாக உணர்கின்றேன்.
கல்லீரல் பகுதியில் உப்பிசமாக உணர்ந்தேன். ஆனால், பொதுவாக எந்த உணர்ச்சியும் இல்லை.
கல்லீரல் கொழுப்பு ஒரு சாதாரண நோயாகும். உரிய நேரத்தில் சிகிச்சை பெற்றால் குணமடையலாம். ஆகையால், முன்னதாகவே சிகிச்சை பெறுவது, இந்நோய் தடுப்பு மற்றும் இதனால் ஏற்பட்ட பாதிப்பைக் குறைப்பதற்கு மிக முக்கியமானது. ஆனால், பல நோய்வாய்பட்டவர்கள் இதில் போதுமான கவனம் செலுத்தவில்லை என்று களவாய்வின் முடிவு காட்டுகின்றது.
1 2 3
|