குகை அருங்காட்சியகம்

தாய்லாந்து உலகில் மிகவும் சிறப்புமிக்க நீர்வாழ் உயிரின அருங்காட்சியகத்தை குகைவடிவில் அமைத்து பெருமை பெற்றுள்ளது. தாய்லாந்தின் வடக்கு பகுதியின் Chiang Mai யில் அமைந்துள்ள நீர்வாழ் உயிரின குகை அருங்காட்சியகம் உலகிலேயே மிக நீளமான நீர்வாழ் உயிரின குகை அருங்காட்சியகமாகும். Chiang Mai உயிரியல் பூங்காவின் இந்த அருங்காட்சியகம் 1.6 ஹெக்டேர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. 133 மீட்டர் நீளம் கொண்ட இது, 66.5 மீட்டர் அகலமுடையது. உயிரியல் பூங்கா நிறுவனத்தால் கட்டப்பட்ட இந்த உலகில் நீளமான நீர்வாழ் உயிரின குகை அருங்காட்சியகத்தில் ஏறக்குறைய 8,000 நீர்வாழ் உயிரினங்களும், அவற்றின் 250 வகைகளும் உள்ளன.
1 2 3
|