• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-03 15:04:10    
சீனச்சிவப்பு

cri

சீனச்சிவப்பு

சிவப்பு நிறம் பொதுவாக ஆபத்துக்கு உரிய நிறமாக பார்க்கப்படுவதுண்டு. போக்குவரத்து விளக்காக சிவப்பு, வண்டிகளை நிறுத்தச் செய்யும், மனித உருவம் பொறித்த சிவப்பு அடையாள விளக்கென்றால், சாலையை கடக்கக்கூடாது, ஆபத்து. வண்டியின் பின்புறமுள்ள சிவப்பு விளக்கு எரிந்தால், அருகே வராதே நான் நிற்கப்போகிறேன், தள்ளியே நில் என்று பொருள். ஆக ஆபத்து என்பதை விட ஒரு வித எச்சரிக்கையை உணர்த்தும் அடையாளமாக சிவப்பு நிறம் அமைகிறது.

சிவப்பு நிறத்துக்கே உரிய ஈர்க்கும் தன்மை மற்ற நிறங்களிலிருந்து அதை தனித்து நிற்கச் செய்கிறது எனலாம்.

சீனாவில் தற்போது வசந்தவிழா காலம். எங்கு பார்த்தாலும் செந்நிற விளக்குகளும், செந்நிற அலங்காரங்களுமாக பெய்ஜிங் மாநகரம் தகதகக்கிறது. நாம் ஏற்கனவே கடந்த வார நிகழ்ச்சியில் குறிப்பிட்டது போல், சிவப்பு நிறத்துக்கும் சீனாவுக்கும் உள்ள தொடர்பு, பண்பாட்டு ரீதியில் மக்களது வாழ்க்கையோடு ஒன்று கலந்தது என்பதால், சீனர்களின் பாரம்பரிய விழாவான வசந்தவிழாவின்போது எங்கெங்கு காணினும் செந்நிறமே.

1 2 3