சிவப்பு இரட்டை காகிதத்துண்டு (துய்லியன்)



வசந்த விழாவின்போது, பொதுவாக வீடுகளின் கதவுகளில் சிவப்பு நிற காகிதத்தில் மங்கல வார்த்தைகள் எழுதப்பட்டு ஒட்டப்படும். பொதுவாக அவை இரண்டு காகிதத்துண்டுகளில், ஒன்றேபோல் தொனிக்கும், ஒலிக்கும் இரண்டு கவித்துவமான வாக்கியங்கள் அடங்கியதாக அமைந்திருக்கும். புதிய ஆண்டிலான நம்பிக்கையை, எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் வார்த்தைகள் பொதுவாக இந்த இரட்டை காகிதத்துண்டுகளில் எழுதப்படுகின்றன. வசந்தவிழா அலங்காரத்தில் மிக அவசியமான ஒன்று இந்த இரட்டை சிவப்பு நிற காகிதத்துண்டுகள் ஆகும்.
1 2 3
|