 பாம்பு நண்பர்
பாம்பு என்றால் அனைவருமே பயப்படும் காலத்தில் பாம்பும் சிறுவன் ஒருவனும் நண்பராக வாழ்வதை பார்த்தால் வியப்பு தான் மேலிடுகிறது. Guangdong மாநிலத்தின் Dongguan னிலுள்ள 8 வயது Bing Zhe என்ற சிறுவனுக்கு மிக பெரிய பாம்பு ஒன்று உற்ற நண்பனாக மாறியுள்ளது. இச்சிறுவன் பிறந்த 9 வது திங்களிலிருந்தே அந்த பாம்புடனே வாழ்ந்து வருகிறான். 14 வயதாகும் 70 கிலோ எடையும், 4.2 மீட்டர் நீளமும் கொண்ட இந்த பாம்பை தலையணையாக கொண்டு Bing Zhe தூங்கியும் இருக்கிறான். இந்த பாம்பு இதுவரை அவனை காயப்படுத்தியதில்லை. ஒருமுறை Bing Zhe வை கொத்த வந்த நல்ல பாம்பை விரட்டியடித்து, இந்த பாம்பு நண்பர் தான் காப்பாற்றியுள்ளர். எனவே இப்போது Bing Zhe வும் இந்த பாம்பும் இணைபிரியா நண்பர்களாகி விட்டனர்.
1 2 3
|