
கழைக்கூத்து நிகழ்ச்சி
குவெய்சோ சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. அதன் தலைநகரான குவெய்யாங் சிறந்த கோடை வாழிட மாநகரம் என்ற சிறப்பு பெற்றுள்ளது. அங்கு தேயிலையை விளம்பரப்படுத்தும் விதமாக கடந்த திங்கள் நடிகர்கள் மற்றும் பாரம்பரிய கழைக்கூத்தாடிகள் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. 100 தேயிலை ஆலைகளும், 38 நாடுகளிலிருந்து வந்த வணிகர்களும் தங்களுடைய தேயிலைப் பொருட்களை கண்காட்சிக்கு வைத்திருந்தனர்.
நீரில் நடனம்
நீரில் பல சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதுண்டு. தெற்கு கரோலினாவில் விலங்குகளுக்கு பயிற்சியளிக்கும் பெண் நிபுணர் ஒருவர் நீரில் மூழ்கிய படி புலி ஒன்றோடு நடனமாடி மகிழ்ந்தார். அதனை பார்க்க மக்கள் பலர் கூடினர். புலியோடு அதும் நீரில் மூழ்கியபடி நடனமாடிய அவரது வீரத்தை பாராட்ட வேண்டும். 1 2 3
|