  
வானில் திருமணம்
வழக்கமாக நடைபெறுகின்ற செயல்களை வியத்தகுமுறையில் மாறுபட்ட விதத்தில் செய்ய வேண்டும் என்ற பலர் நினைக்கின்றனர். தங்களுடைய திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த விரும்பிய பெல்ஜியம் தம்பதியர் Sandra Eens மற்றும் Jeroen Kippers வானில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். Sint-Truiden இராணுவ தளத்தில் வைத்து 40 மீட்டர் உயரமான மேடையில் திருமண வாக்குறுதிகளை பரிமாறிக் கொண்டு மணம் முடித்தனர். பின்னர் இருவரும் இணைந்து, bungee jump எனப்படும் காலில் வடத்தால் கட்டி கொண்டு தலைகீழாக குதித்து மகிழ்ச்சியை கொண்டாடினர். வானில் திருமணம் என்ற புதிய முயற்சி பெல்ஜியம் நிறுவனம் ஒன்றால் 25 நாடுகளில் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பலர் திருமணம் செய்வதை தொடர்ந்தால், பாரம்பரிய முறைகளை நினைவுகூர்ந்து உற்றார் உறவினர் மற்றும் சமூக மக்கள் அனைவரோடு இணைந்து கொண்டாடப்படும் திருமண நடைமுறைகளை காலம் செல்லசெல்ல மறந்தாலும் வியப்பில்லை.
1 2 3
|