• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-19 11:00:52    
டாங்கா ஓவியம் பற்றிய தகவல்

cri

ஆகவே நாங்கள் முதலில் டாங்கா என்பதன் பொருள் என்ன?என்பதற்கு விடையளிக்கின்றோம்.

டாங்கா என்பது டாங்க என்பதன் இன்னொரு பெயராக அழைக்கப்படுகின்றது. அது சீனாவின் திபெத் இனத்தின் பண்பாட்டுத் துறையில் தனிச்சிறப்பியல்பு மிக்க ஓவிய கலை வடிவத்தையும் மிக பல கருப்பொருட்களையும் உள்ளடக்கிய ஓவியமாகும். அதன் பெயர் திபெத் மொழியின் உச்சரிப்புக்கிணங்க சூடப்படுகின்றது. அது திபெத் இனத்தின் வரலாறு, அரசியல், பண்பாடு மற்றும் சமூக வாழ்க்கையுடன் தொடர்புடையது. திபெத் இன மக்கள் புத்தர் மீது கொண்டுள்ள மதிப்புணர்வையும் திபெத் பீடபூமி மீதான நாட்டு பற்றுணர்வையும் டாங்கா ஓவியம் கொண்டுள்ளது. இது திபெத் இனத்தின் கலைகளஞ்சியமாக அழைக்கப்படுகின்றது. பல வண்ண பட்டுத் துணிகளால் தீட்டப்பட்டு தொங்கப்படுகின்ற மத ஓவியமும் இதுவாகும். புத்த மதத்துடன் தொடர்பு கொண்ட டாங்கா ஓவியம் பட்டு துணியால் தீட்டப்பட்ட பின் புத்த மத திருமறை ஓதப்பட்டு பின்னர் புத்த மத தலைவர்களின் கையொப்பம் இதில் பதிக்கப்படும். டாங்கா ஓவியம் உருவாக்கும் கைவினைமுறை மிகவும் சிக்கலானது. நிறங்கள் இயற்கையான கனிம தாவரங்களின் மூலப் பொருட்களால் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு உருவாகும் நிறங்கள் மிகவும் பளபளப்பானவை. நீண்டகாலம் மங்காமல் நிலைக்கக் கூடியவை. பீடபூமியின் தனிச்சிறப்பியல்பு டாங்கா ஓவியங்களுடன் இணைந்துள்ளது.

1 2 3