• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-19 11:00:52    
டாங்கா ஓவியம் பற்றிய தகவல்

cri

அடுத்து டாங்கா ஓவியம் எந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது?என்பது பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.

சீனாவின் திபெத்தின டாங்கா ஓவியத்தின் வரலாறு நீண்டகாலமுடையது. செழுமையான அம்சங்களில் அதன் வகைகள் அதிகமானவை. சமூகத்தின் பல்வேறு நிலைமைகளின் காரணமாக சீனாவின் தாங்சுன் வம்சகாலங்களில் பரவிய டாங்கா ஓவியங்கள் மிக குறுகிய காலமாக பாதுகாக்கப்பட்டன. சாட்சி கோயிலில் பத்திரமாக வைக்கப்பட்ட டாங்கா ஓவியம் "சாஞ்சிதுங்சியா" என்று அழைக்கப்படுகின்றது. இந்த ஓவியத்தில் 35 புத்த சிலைகள் தீட்டப்பட்டன. அதன் எளிதான ஓவிய பாணி சீனாவின் கேன்சு மாநிலத்தின் துங்குவான் கற்குகையில் கண்டுபிடிக்கப்பட்ட கற்சுவர் ஓவியத்துடன் மிகவும் ஒன்றி போகிறது. இதன் மதிப்பு மிக உயர்வானது என்று மதிப்பிடப்படுகின்றது. தான் வம்சகாலத்தில் தீட்டப்பட்ட 3 டாங்கா ஓவியங்கள், திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகரான லாசாவிலுள்ள புட்டரா மாளிகையில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று டாங்கா ஓவியங்களில் ஒன்று குங்தாங் புத்த மத தலைவர் படமாகும். குங்தாங் புத்த மத தலைவர் 1123ம் ஆண்டில் பிறந்து 1182ம் ஆண்டில் காலமானார். அவருடைய வாழ்க்கையைப் பதிவு செய்த இந்த ஓவியம் சுன் வம்சகாலத்தில் சிறந்த படைப்புகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 2 3