• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-19 11:00:52    
டாங்கா ஓவியம் பற்றிய தகவல்

cri

சீனாவின் மிங், சிங் ஆகிய இரண்டு வம்சகாலங்களில் நடுவண் அரசு திபெத் மீதான ஆட்சியை வலுப்படுத்தும் வகையில் திபெத்திலுள்ள புத்த மத பிரிவுகளுக்கு தலைவர்களை நியமிக்கும் வழிமுறையை நிறைவேற்றியது. மின் வம்சகாலத்தில் 8 புத்த மத தலைவர்களும், சிங் வம்சகாலத்தில் தலாய், பெச்சான் போன்ற மத தலைவர்களும் நியமிக்கப்பட்டனர். இந்த நியமித்தல் முறை திபெத் சமூகத்தின் அமைதி, பொருளாதார மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு பயன் தந்தது. இதனுடன் டாங்கா ஓவிய கலைநுட்பம் வளர்ந்து உச்ச நிலையை அடைந்தது. அப்போது தனிச்சிறப்பியல்பு மிக்க டாங்க ஓவியங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பல்வகை பாணிகளுடைய புதிய ஓவியப் பிரிவுகள் உருவாகின. இவையனைத்தும் டாங்க ஓவியம் நீண்டகாலமாக வளர்வதற்கு அடிப்படை இட்டுள்ளன. இதனுடன் திபெத் ஓவியம் தீட்டும் கலை நுட்பம் மேலும் வளர்ச்சியடைந்துள்ளது. பொதுவாக கூறின், முற்கால டாங்கா ஓவியங்களின் வடிவமைப்பு கண்டிப்பான வடிவத்தில் உள்ளது. மனித நிழற்படங்கள் அப்போது மிகவும் பரவலாக இருந்தன. மனிதரின் உள் உணர்வு மாற்றங்களின் முன்னேற்றப் போக்குகள் ஓவியத்தில் விபரமாக வர்ணிக்கப்பட்டன. பிற்கால டாங்கா ஓவியங்கள் ஆடம்பரமாக காணப்படுகின்றன. ஓவியத்தின் வடிவம், கோடுகள், நிறம் ஆகியவை கோலாகலமாக காணப்படுகின்றன.


1 2 3