• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-24 12:36:30    
சீன சூ சோ மின்னணு உற்பத்தி பொருட்காட்சி

cri

சூ சோ நகரம் சீனாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுதோறும் அக்டோபர் திங்களில், இந்நகரில் மின்னணு துறைப் பொருட்காட்சி நடைபெற்று வருகின்றது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற தகவல் தொழில் நுட்பத் துறை தயாரிப்பு வணிகர்களும் ஆய்வு நிறுவனங்களும், கொள்வனவு வணிகர்களும் இப்பொருட்காட்சியில் கலந்து கொண்டு, தொழில் நுட்பப் பரவல், வணிக பேச்சுவார்த்தை, தொழில் கருத்தரங்கு முதலிய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

ஷாங்காய், ச்சியாங் சூ, சே ச்சியாங் ஆகியவற்றால் உருவாக்கப்படும் சீன யாங்சி ஆற்று கழிமுகப்பிரதேசம், சீனாவில் மிக அதிகப் பொருளாதார ஆற்றல் கொண்ட பிரதேசமாகும். மட்டுமல்ல, சீன மின்னணு தகவல் தொழிலின் முக்கிய தளமாரவும் இது திகழ்கின்றது. யாங்சி ஆற்று கழிமுகப்பிரதேசத்தில் தகவல் தொழில் நுட்பத் தொழிலின் வளர்ச்சிக்குச் சேவை புரியும் வகையில், இப்பிரதேசத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஆயிரமாண்டு வரலாறுடைய சூ சோ நகரத்தில், 2002ம் ஆண்டு முதல் மின்னணுத்துறை பொருட்காட்சி நடைபெற்று வருகின்றது. தற்போது, சீனாவில் செல்வாக்கு மிகுந்த மின்னணு தொழில் பொருட்காட்சிகளில் ஒன்றாக இது மாறியுள்ளது. 630க்கு அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தகவல் தொழில் நுட்பத் தொழில் நிறுவனங்களும், தொடர்புடைய நிறுவனங்களும் இவ்வாண்டின் பொருட்காட்சியில் கலந்து கொண்டன. உலகில் இவ்வெண்ணிக்கை மிக உயர் பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 2 3