• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-24 12:36:30    
சீன சூ சோ மின்னணு உற்பத்தி பொருட்காட்சி

cri

அரை மின் கடத்தி உதிரிப்பாகம், ஒளி மின் பொருட்கள், தகவல் மென்பொருள், எண்ணியல் வாழ்க்கை முதலிய பொருட்காட்சி அகங்கள் இவ்வாண்டின் பொருட்காட்சியில் அமைக்கப்பட்டன. தவிர, சிறப்பு தொழில் தன்மை வாய்ந்த அறிவியல் தொழில் நுட்ப கருத்தரங்குகளும், ஆய்வு கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டன. நிபுணர்கள் தொழில் நுட்பம் மற்றும் சந்தை பிரச்சினைகள் பற்றி விளக்கி கூற நிபுணர்கள் அழைக்கப்பட்டனர். காட்சியில் காண்பிக்கப்பட்ட செழிப்பான தொழில் நுட்ப சாதனைகளும் உள்ளார்ந்த வணிக வாய்ப்புகளும் பன்னாட்டு வணிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. ஸ்வீடனைச் சேர்ந்த வணிகர் ஓட் லிண்டர் கூறியதாவது

இந்தப் பொருட்காட்சியின் அளவு மிகப் பெரியது. என் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. மிகப்பல புத்தாக்க கருத்துக்களும், உற்பத்தி பொருட்களும், எண்ணங்களும் இதில் சேர்க்கப்பட்டன. நான் பொருட்காட்சியை மேலும் கவனமாக பார்வையிட விரும்புகின்றேன் என்றார் அவர்.

உலகளவிலான எரியாற்றல் பற்றாக்குறை, மின்னணு மாசுபாடு ஆகிய பிரச்சினைகள் மோசமாகி வரும் பின்னணியில், மாசுபாட அறிவியல் தொழில் நுட்பம் என்பது இவ்வாண்டு பொருட்காட்சியின் தலைப்பாக அமைக்கப்பட்டது. சூரிய ஆற்றல் மின்னணு வியல், திட அரை மின் கடத்தி முதலிய எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி, கரி பயன்பாட்டைக் குறைக்கும் கருத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட மாசற்ற மின்னணு தொழில் நுட்ப உற்பத்தி பொருட்கள் இப்பொருட்காட்சியில் வைக்கப்பட்டன. அந்த அறிவியல் தொழில் நுட்பக் கனிகள், சிலிக்கான் சில்லு, கணிணி, வாகன மின்னணு சாதனம் முதலியவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று பொருட்காட்சியின் பணியாளர்கள் அறிமுகப்படுத்தினர்.

பெய்ஜிங்கைச் சேர்ந்த ஒரு கூட்டு நிறுவனத்தின் காட்சியரங்கில், 2 கணிணி மாதிரிகள் மக்களின் கவனத்தை ஈர்த்தன. பார்ப்பதற்கு, அவற்றின் பரிமாணம் சிறியது. அவற்றில் ஒன்றின் பரிமாணம் சுமார் 2 சாதாரண புத்தகங்களின் அளவைப் போல் இருக்கின்றது. இந்தக் கணிணியில் மிகப் புதிய சிலிக்கான் சில்லு பயன்படுத்தப்பட்டது. மக்களுக்கு வசதி அளிக்கும் அதேவேளையில், எரியாற்றல் பயன்பாட்டையும் இது பெரிதும் குறைக்கக் கூடியது என்று தெரிய வருகின்றது. இந்த கூட்டு நிறுவனத்தின் வணிக அலுவல் இயக்குநர் சோ காங் கூறியதாவது

இந்தக் கணிணியில் பொருத்தப்பட்ட செயற்பாட்டு கலன் உலகில் மிகச் சிறிய கரிமம் இல்லாத செயற்பாட்டு கலனாகும். அதன் மையப் பகுதியில் ஈயமில்லா தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதர செயற்பாட்டு கலன்களுடன் ஒப்பிடும் போது, அதன் எரியாற்றல் பயன்பாடு சுமார் 70 விழுக்காடு குறையும் என்றார் அவர்.

புகழ் பெற்ற ஒரு அமெரிக்க கூட்டு நிறுவனத்தின் காட்சியரங்கில் காண்பிக்கப்பட்ட ஒரு வகை தகடு மிகவும் சிறப்பானது. மின்சார கருவிகளின் தட்டிக்காக இது வடிவமைக்கப்பட்டது. செல்லிடபேசி, தொலைக்காட்சிப் பெட்டி, கணிணி முதலிய வசதிகளில் ஒரு வகை சிறப்பு பூச்சு கலந்து கண்ணாடி மற்றும் வில்லைகள் பயன்படுத்தப்பட்டால், கிணிஸ்கோப்புகளின் பயன்பாடு பாதியாக குறைக்கப்படும். இதன் மூலம், எரியாற்றல் சிக்கனப்படுத்தப்படும். இந்தக் கூட்டு நிறுவனத்தின் தொழில் நுட்பப் பொறியியலாளர் shi jin ning கூறியதாவது

அதிகம் ஒளிரும் தன்மை வாய்ந்த வேதியல் கூட்டணுப்பொருள் பூச்சை பயன்படுத்துகின்றோம். முப்பட்டகத்தில் முழுமையான பிரதிபலிப்பைச்செய்கின்றோம். இத்தகைய தகடு பயன்படுத்தப்பட்ட பின், ஒளியின் திறன் குறைக்கப்படாத நிலையில், ஏறக்குறைய 40 விழுக்காடு எரியாற்றல் பயன்பாடு குறைக்கப்படலாம் என்றார் அவர்.

1 2 3