
இப்பொருட்காட்சியில் கலந்து கொண்ட ஹாங்காங், மக்கௌ மற்றும் தைவான் வணிக நிறுவனங்களின் எண்ணிக்கை 32 விழுக்காடாகும். தற்போது சூ சோ நகரில் தைவான் தகவல் தொழில் நுட்பத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 1000ஐத் தாண்டியுள்ளது என்று இந்நகர துணைத் தலைவர் zhou wei qiang எடுத்து கூறினார்.
தற்போது, உலக நிதி நெருக்கடியின் பாதிப்பு பரவி வருகின்றது. மின்னணு தகவல் தொழிலுக்கு இது உறுதியற்ற அம்சங்களை கொண்டு வருகின்றது என்று தைவான் அச்சு சுற்றுப்பலகை தகவல் தொழில் நுட்பத் துறை சம்மேளனத்தின் பெருநிலப் பகுதிப் பிரிவின் பொறுப்பாளர் xie bing xun கூறினார். ஆனால், இரு கரைகளுக்கிடையிலான தொழில் ஒத்துழைப்பு போக்கு மாறாது என்று அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது
தற்போது, இரு கரைக்களுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பு சிறந்த நிலையை அடையவில்லை. ஆனால், எதிர்காத்தின் மீது நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். பெருநிலப் பகுதியின் சந்தை மிக பெரியது. வளர்ச்சி ஆற்றல் மிக்கது என்றார் அவர்.
சூ சோ மின்னணு உற்பத்தி பொருட்காட்சி மூலம், சீனப் பிரதேச பொருளாதார அமைப்புமுறையின் மாற்றத்தையும், மின்னணு தொழிலின் வளர்ச்சியையும் மக்கள் கண்டறிந்துள்ளனர். யாங்சி ஆற்று கழிமுகப்பிரதேசத்தில் மின்னணு தகவல் தொழில் வளர்ச்சியின் மாபெரும் உள்ளார்ந்த ஆற்றலினால், இந்த மின்னணு உற்பத்தி பொருட்காட்சி சூ சோ நகரைத் தேர்ந்தெடுத்து நடத்தப்படுகின்றது என்று தெரிகின்றது.
கடந்த சில ஆண்டுகளின் வேகமான வளர்ச்சியுடன், இப்பிரதேசத்தின் சீரான பொருளாதார அடிப்படை, பரந்த தொழில் மனித ஆற்றல் வளம், ஜப்பான், தென் கொரியா மற்றும் தெற்காசியாவை ஒட்டி அமைந்த நிலவியல் சூழல் ஆகியவை, பல சிறந்த தொழில் நிறுவனங்களை ஈர்த்துள்ளன. இப்பிரதேசம், சீன மின்னணு தொழில் ஆய்வு மற்றும் தயாரிப்பின் முதுகெலும்பாக மாறியுள்ளது. 1 2 3
|