
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, உலக மக்களை மனமுருகச் செய்த காட்சிகள் இந்த உலக பல்கலைக்கழக மாணவர் குளிர்கால விளையாட்டுப் போட்டியில் மேலும் நடந்தேறியுள்ளன. இப்போட்டியில் கலந்துகொண்ட வீரர்களும் விருந்தினர்களும் சீன மக்களின் உற்சாகத்தையும் ஆயத்த ஆற்றலையும் மீண்டும் உணர்ந்துள்ளனர்.
இந்த உலக பல்கலைக்கழக மாணவர் குளிர்கால விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணிகளை சர்வதேச பல்கலைக்கழக் மாணவர் விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் Killian வெகுவாகப் பாராட்டினார். அவர் கூறியதாவது:
இந்த உலக பல்கலைக்கழக மாணவர் குளிர்கால விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணிகளால் மனநிறைவு அடைகின்றேன். இப்போட்டி வெற்றிகரமாக நிறைவடைவது உறுதி என நம்புகின்றேன் என்றார் அவர்.
1 2 3
|