
கடந்த 4 ஆண்டுகளில், உலக பல்கலைக்கழக மாணவர் குளிர்கால விளையாட்டுப் போட்டிக்கு ஹாய் பினிடம் பெறும் ஹெய் லாங்சாங் மாநிலம் 300 கோடி யுவானை முதலீடு செய்தது. உபசரிப்பு நாட்டுக்கு எந்த நிர்ப்பந்தத்தையும் முழு உலக நிதி நெருக்கடி வழங்கவில்லை என்று ஹெய் லாங்சாங் மாநிலத்தின் தலைவர் Li Zhanshu தெரிவித்தார். அவர் கூறியதாவது:
ஹெய் லாங்சாங் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை சர்வதேச நிதி நெருக்கடி பாதித்தது. அன்றியும், இப்பாதிப்பு தொடர்ந்து ஆழமாக்கி வருகின்றது. ஆனால், உலக பல்கலைக்கழக மாணவர் குளிர்கால விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதை நிதி நெருக்கடி பாதிக்கவில்லை என்று அவர் கூறினார்.
தவிர, நிதி நெருக்கடியை சமாளித்து, சர்வதேச பல்கலைக்கழக் மாணவர் விளையாட்டு கூட்டமைப்பின் கருத்துக்களை பின்பற்றும் வகையில், தன் சக்திக்குட்பட்ட அளவிலான கண்ணோட்டத்தை சீனாவின் ஆயத்தப் பணிகள் முழுமையாக வெளிப்படுத்தியுள்ளன.
நிதி நெருக்கடியிலுள்ள இந்த உலக பல்கலைக்கழக மாணவர் குளிர்கால விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெறுவது உள்ளூர் பொருளாதார சமூகத்துக்கு வளர்ச்சி வாய்ப்பை வழங்கலாம் என்று Li Zhanshu தெரிவித்தார். அவர் கூறியதாவது:
உலக பல்கலைக்கழக மாணவர் குளிர்கால விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெறுவது பனி மையமாக கொண்ட ஹெய் லாங்சாங் சுற்றுலா துறையின் வளர்ச்சியை முன்னேற்றும். விளைவாக, சுற்றுலா துறையின் வளர்ச்சி பல வேலைவாய்ப்புகளை உருவாக்கி, போக்குவரத்து மற்றும் சமூகப் நுகர்வு அதிகரிப்பை தூண்டி, உள்நாட்டின் நுகர்வை விரிவுபடுத்தும். இந்த உலக பல்கலைக்கழக மாணவர் குளிர்கால விளையாட்டுப் போட்டிக்கான ஆக்கப்பணி மற்றும் ஆயத்த பணிகள் உள் நாட்டுத் தேவையை விரிவுப்படுத்தியது. இப்போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதன் மூலம், நிதி நெருக்கடியால் ஏற்பட்ட பாதிப்பை நாங்கள் சமாளித்துள்ளோம் என்று அவர் கூறினார். 1 2 3
|