
தவிர, இவ்வீதியில் போடப்பட்ட குறிப்பிட்ட அரங்கில், சீனாவின் பாரம்பரிய தனிச்சிறப்புமிக்க நிழல் நாடகம், பொம்மலாட்டம் முதலிய நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படும். குறிப்பாக, பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களின் வாரிசுகள் 8 பேர், பாரம்பரிய கலை தொழில் நுட்பத்தை வெளிப்படுத்துகின்றனர். சாங் வெய் மேலும் கூறியதாவது:
நாடளவிலான மற்றும் உலகளவிலான பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வ நிகழ்ச்சிகளை காட்சிக்கு வைக்கின்றோம். இதில், வெள்ளி மணிக்கல் சிற்பங்கள், பெய்ஜிங்கின் பட்டுத்துணி மலர் முதலியவை இடம்பெறுகின்றன என்றார் அவர்.

அதே வேளை, விளக்க விடுகதை யூகம் செய்கின்ற நிகழ்ச்சியில் பயணிகள் கலந்துகொள்கின்றனர். உணர்வுப்பூர்வமான யூகங்களின் மூலம், பாரம்பரிய சீனப்பண்பாட்டை புரிந்துகொள்ளலாம். 1 2 3 4 5
|