Aerobics என்பது அவசரமான இன்றைய உலகில் வளர்ந்து வரும் ஒருவித உடல் கட்டுக்கோப்புக்கான பயிற்சி முறையாகும். நடத்தல், jogging எனப்படும் மெல்லோட்டம், ஓட்டம், மிதிவண்டி ஓட்டுதல் போன்ற பல உடற்பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு, சீரான சுவாச அமைப்போடு கூடிய உடல் கட்டமைப்பை பெற செய்வதே aerobics உடல் கட்டுக்கோப்பு பயிற்சி முறையின் நோக்கமாகும். இப்போது சீனாவில் இத்தகைய பயிற்சி முறை விரைவாக பரவலாகி வளர்ந்து வருகிறது.
ஷன் துங் மாநிலத்தின் தலைநகரான ஜி நன்னில், Jing Cai Ren Sheng என்ற உடல் கட்டுக்கோப்பு பயிற்சி அரங்கில், aerobics பயிற்சி முறையில் கலந்து கொள்பவரில், 20 வயதான இளம் பெண்களும், 40 முதல் 50 வயதான பெண்களும் உள்ளனர்.
இந்த உடல் கட்டுக்கோப்பு பயிற்சி வகுப்புகளில் Yu Jia, லத்தீன் நடனம் மற்றும் aerobics உடல் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. அது தவிர, அலங்காரம், நிதான மனப்பாங்கு பயிற்சி, உளநல தேற்றுதல் வகுப்பு ஆகியவையும் இருக்கின்றன. இதனால், இதர உடல் கட்டுக்கோப்பு பயிற்சி நிலையங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இந்த நிலையம் வேறுபட்டதாக காணப்படுகிறது என்று Jing Cai Ren Sheng பயிற்சி நிலைய உறுப்பினர்கள் கூறுகின்றனர். நாள்தோறும் பயிற்சி நிலையத்துக்கு வருவது, அவர்களின் வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறியுள்ளது.
Zhao Xiao Ran என்னும் உடல் கட்டுக்கோப்பு பயிற்சி நிலைய உறுப்பினர் பேசுகையில், இந்த நிலையத்தில் நிதான மனப்பாங்கு பயிற்சிற்கான வகுப்பு திறக்கப்பட்டுள்ளது. மக்களுக்கிடையிலான பரிமாற்றம், செயல்கள், வெளிதோற்றம், ஆடைகள் பற்றிய இங்கிதங்களை ஆசிரியர் Guo எங்களுக்கு சொல்லிக் கொடுக்கின்றார். பிறருடனான தொடர்பு, உடற்பயிற்சி ஆகியவற்றில் அதிக அறிவுகளைக் பெற்றுக்கொண்டு, பலருடன் நண்பர்களாக பழகி கற்றுக்கொண்டுள்ளேன். இங்கே அனைவரும் கூட்டாக முன்னேறுகின்றோம் என்றார், அவர்.
அந்த உறுப்பினர் குறிப்பிட்ட ஆசிரியர் Guo, இப்பயிற்சி நிலையத்தை நிறுவியவர். அவரது முழு பெயர் Guo Ran. அவருக்கு வயது 38. ஆறு ஆண்டுகளுக்கு முன், ஜி நன் நகரின் முதலாவது மகளிர் aerobics பயிற்சி நிலையத்தை அவர் நிறுவினார். அந்நிலையத்தில் பயிற்சிகள், மகளிரின் தோற்றத்தை மேம்படுத்துவதற்கான Aerobics உடற்பயிற்சிகள் மட்டுமல்ல. மகளிரின் நிதான மனபாங்கு வளர்ப்பு, உளநல தேற்றுதல் ஆகியவற்றில் மேலதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
1 2 3
|