சிறு வயதிலிருந்தே நடனம் கற்றுக்கொண்ட Guo Ran அம்மையார், பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் பொறியல் துறையில் பட்டம் பெற்றார். பின்னர், புகழ் பெற்ற பெரிய ரக தொழில் நிறுவனத்தின் மனித வளப் பிரிவுத் தலைவராக பதவி ஏற்றார். அப்போது, கடந்த நூற்றாண்டின் 90ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியாகும். Aerobics உடல் கட்டுக்கோப்பு பயிற்சி நிலையம் ஒன்று Ji Nan நகரில் நிறுவப்பட்டது. இளம் பெண்ணாக இருந்த Guo Ran பயிற்சி நிலையத்தின் பகுதி நேர பயிற்சியாளராக மாறினார்.
"எனது கருத்தில், உடற்பயிற்சி, நடனத்துடன் நெருக்கமாக தொடர்பு கொண்டதாகும். நடன அபிநயங்களையும் உடற்பயிற்சி வகுப்பில் சேர்த்தேன். பயிற்சி நிலைய உறுப்பினர்களாக பலர் இணைந்து உடற்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புகின்றனர் என்று Guo Ran அம்மையார் கூறினார்.
தமது நடன திறமையை உடற்பயிற்சியுடன் இணைத்து, உருவாக்கிய aerobics என்ற உடல் கட்டுக்கோப்புக்கான முறை உடற்பயிற்சிக்கு துணை புரியும். மட்டுமல்ல, அவற்றை பயிற்சி அளிக்கும் போது அழகாகவும் காணப்படுகின்றது. அதிகமான பெண்களை இந்த aerobics பயிற்சி முறை உடனடியாக ஈர்த்துள்ளது. பகுதி நேர பயிற்சியாளராக வேலை செய்த 5 ஆண்டுகளில், Guo Ran அம்மையார் பெண் உறுப்பினர்கள் அனைவரின் பாராட்டை பெற்றார்.
அதற்கிடையில், மனித வளம் தொடர்பான தமது பணியின் காரணமாக, உளநலம் தொடர்பான அதிக வகுப்புகளை அவர் கற்றுக்கொண்டார்.
அந்த வகுப்புகளும், தொடர்புடைய தத்துவங்களும், Guo Ran அம்மையாருக்கு புத்துணர்வு ஏற்படுத்தின. உறுப்பினர்களிடம் உளநலம் தொடர்பாக, அவர் நேரடியாக பயிற்சி அளித்தபோது, மக்களின் ஊக்கத்தை தட்டி எழுப்பி, அவர்களின் உளநிலையை மேம்படுத்துவதில் அவை எதிர்பாராத பயனை தந்துள்ளதை அவர் கண்டுபிடித்தார். அதனால் அவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
2002ஆம் ஆண்டு, Guo Ran அம்மையார், ஊதியம் அதிகமான பணியிலிருந்து விலகி, உற்சாகத்தைத் தட்டி எழுப்பி, உள்ளார்ந்த ஆற்றலை தூண்டுவதை இறுதி நோக்கமாகக் கொண்ட மகளிர் aerobics உடல் கட்டுக்கோப்பு பயிற்சி நிலையத்தை நிறுவினார். அந்நிலையம் Jing Cai Ren Sheng என்னும் பெயரால் பெறுகிறது. Jing Cai Ren Sheng என்றால், சீன மொழியில் அருமையான வாழ்வு என்று பொருட்படும்.
மகளிர் அனைவரும் அருமையான வாழ்க்கையை நடத்தும் பொருட்டு, உயிர்த்துடிப்புள்ள பயிற்சியின் மூலம் அவர்களின் தோற்றத்தை மேம்படுத்தவும், பெண்களின் சிந்தனை முறையை மாற்றி, அவர்களுக்கு உளநலம் மற்றும் மன உறுதியை அளிக்கவும் விரும்புகின்றேன் என்றார் Guo Ran அம்மையார்.
1 2 3
|