நிதி நெருக்கடியின் பாதிப்பினால், கடந்த ஆண்டின் அக்டோபர் திங்கள் முதல், சீனாவின் சில துறைகளிலும் தொழில் நிறுவனங்களிலும், வணிகச் சிக்கல்களை எதிர்நோக்கியதால், பணியாளர் தேவையைக் குறைத்தன. நகரங்களுக்குச் சென்று பணி புரிந்த விவசாய தொழிலாளர்கள், வேலையிழந்து வேறு வழியின்றி சொந்த ஊருக்குத் திரும்பினர். தவிரவும், பல்கலைக்கழகப் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு நிலைமையும், முன்பை விட, மேலும் கடினமாக மாறியுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில், சீனா எப்படி வேலைவாய்ப்பு நிப்பந்தத்தைத் தணிவு செய்யவுள்ளது என்பது பற்றி கூறுகிறோம்.
பொருளாதார வீழ்ச்சியினால் வேலை இழந்த விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் 2 கோடியாகும். இது, நகரங்களில் பணி புரிகின்ற விவசாயத் தொழிலாளர் களின் எண்ணிக்கையில் சுமார் 15 விழுக்காடு வகிக்கிறது.
1 2 3 4 5
|