விவசாய தொழிலாளர்களைத் தவிர, பல்கலைக்கழகப் பட்டதாரிகளின் வேலைவாய்ப்புப் பிரச்சினை, ஒரு குறிப்பிடத்தக்க சிக்கலாக மாறியுள்ளது. புள்ளிவிபரங்களின்படி, இவ்வாண்டு சீனாவின் பல்கலைக்கழகங்களில் பட்டதாரிகளாக வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 61 இலட்சத்து 10 ஆயிரமாகும். கடந்த ஆண்டில் இருந்ததை விட இது 9 விழுக்காடு அதிகரித்தது. ஆனால், கடந்த ஆண்டின் பட்டதாரிகளில் இன்னும் 15 இலட்சம் பேர் நிதானமான வேலைவாய்ப்பு எதையும் பெறவில்லை.
சில நாட்களுக்கு முன் சீனாவின் புகழ் பெற்ற Tsinghua பல்கலைக்கழகம், சுமார் ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசு வாரியங்களை அழைத்து, சிறப்பு வேலைவாய்ப்பு தெரிவுக் கூட்டத்தை நடத்தியது. பெய்ஜிங் பல்கலைக்கழகம், வேலைவாய்ப்பு கூட்டத்தை நடத்தி பன்நோக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இப்பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு வழிகாட்டல் மையத்தின் பொறுப்பாளர் chen yongli கூறியதாவது,
தொழில் திட்டம், வேலைவாய்ப்புச் சந்தை, வேலை தேடுவது முதலியவற்றை அறிந்த நிபுணர்களை அழைத்தோம். அவர்கள் சிறப்பு அறிக்கை மூலம் மாணவர்களின் ஐயத்திற்கு பதிலளித்தனர். தவிரவும், நடுத்தர மற்றும் சிறிய தொழில்நிறுவனங்களுடன் பெய்ஜிங் பல்கலைக்கழம் ஆக்கப்பூப்வமாக தொடர்பு கொண்டு, மாணவர்களுக்காக மேலதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது என்று அவர் விளக்கினார்.
1 2 3 4 5
|