• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Thursday    Apr 10th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-02 15:26:37    
வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம்

cri

அடுத்த 3 ஆண்டுகளில் சீன அரசு 10 இலட்சம் வேலையற்ற பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கு பயிற்சிகளை ஏற்பாடு செய்யும். பணியைத் தேடும் போது அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தவிர, கிராமப்புற மற்றும் சிறிய அடி மட்ட நிலை வாரியங்களில் பணி புரிவதை சீன அரசு ஊக்குவிக்கிறது. சீன கல்வு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் xu mei அம்மையார் கூறியதாவது,

பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கு சீனாவில் தொண்டர் சேவை புரியும் திட்டம், வேளாண்துறை, கல்வி, மருத்துவம், வறுமை ஒழிப்பு ஆகியவற்றுக்கான ஆதரவுத் திட்டம், முதலியவை எங்கள் நடவடிக்கைகளில் அடங்குகின்றன. தவிர, நாங்கள் 1 இலட்சம் பேரை, கிராமப்புறங்களில் கல்விகற்பிக்கும் பணியில் சேர்ப்போம் என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு, சீனாவின் நகர்ப்புறங்களில் புதிதாக 1 கோடியே 11 இலட்சத்து 30 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றனர். ஆண்டின் துவக்கத்தில் வகுக்கப்பட்ட 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்ற இலக்கை இது நனவாக்கியது. சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சியுடன், வேலைவாய்ப்புச் சூழலும் படிப்படியாக மேம்படும். சீன மனிதவள மற்றும் சமூக உத்தரவாத அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் yin chengji இவ்வாறு கூறினார்.


1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040