• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-03 09:26:13    
வேகமாக வளர்ந்து வரும் அறிவியல் தொழில் நுட்பம்

cri

சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை சீனாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள 30 ஆண்டுகளில் அறிவியல் தொழில் நுட்ப அம்சங்கள் பல, சீன மக்களின் உடை, உணவு, உறைவிடம், போக்குவரத்து, வாழ்க்கை பயன்பாட்டுப் பொருட்கள் ஆகியவற்றில் காணப்பட்டுள்ளன.

அனைவரும் அறிந்தவாறு, சீனா உலகில் 7 விழுக்காட்டு விளைநிலத்துடன், அனைத்துலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதி மக்களை கொண்ட ஒரு மாபெரும் நாடாகவுள்ளது. இத்தகைய அற்புதம், தரமான நெல் விதை வளர்ப்பு மற்றும் முன்னேறிய பயிர் செய்கை தொழில் நுட்பத்துடன் நெருங்கிய தொடர்புடையது. எடுத்துக்காட்டாக புகழ்பெற்ற சீன வேளாண் நிபுணர் Yuan longping கலப்பு நெல்லைக் கண்டுபிடித்தார். கடந்த 30க்கு அதிகமான ஆண்டுகளில், இந்தத் தொழில் நுட்பம் சீனாவில் குறைந்தது 1.5 கோடி ஹெக்டர் விளைநிலத்தில் பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஹெக்டர் நெல் விளைச்சல் முன்பிருந்ததை விட சராசரியாக 4.5 டன் அதிகரித்துள்ளது. சீனாவின் உணவு பாதுகாப்புக்கு இது உறுதியான அடிப்படையை இட்டுள்ளது. தற்போது, 70 வயதுக்கு மேற்பட்ட அவர் இன்னும் அறிவியல் தொழில் நுட்ப ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றார். அவர் கூறியதாவது

ஒரு மோவுக்கு 900 கிலோகிராம் நெல் விளைச்சல் பெற ஆய்வு செய்யும் 3வது கால கட்ட மாதிரி திட்டப்பணி மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன். 2010ம் ஆண்டு இத்திட்டத்தை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

இங்கே ஒரு மோ என்பது ஒரு ஹெக்டேரில் 15ல் ஒரு பகுதியாகும் என்பது தெரிய வருகின்றது.

இது மட்டுமல்ல, மிகப்பல முன்னேறிய வேளாண் தொழில் நுட்பங்களின் பரவலுடன் தற்போது சீன மக்கள் முன்பு உட்கொண்ட போதுமான உணவு வகைகளை விட மேலும் சிறந்த உணவு வகைகளை உட்கொள்ள முடியும். சந்தைகளில் வேளாண் உற்பத்தி பொருட்களின் வகைகளும் அளவும் அதிகமானவை. குளிர்காலத்திலும், பச்சை தக்காளி, வெள்ளரிக்காய் முதலிய காய்களும் பழங்களும் சந்தைகளில் கிடைக்கலாம்.

வேகமாக வளர்ந்த பொருளாதாரம் மற்றும் பொறியியல் தொழில் நுட்பத்துடன், சீன நகரங்களில் பொது போக்குவரத்து வசதிகளிலும் மாபெரும் மாற்றங்கள் காணப்பட்டன. 30 ஆண்டுகளுக்கு முன், சீனத்தொடர் வண்டியின் தொழில் நுட்ப வேகம் மணிக்கு 54 கிலோமீட்டர் மட்டுமே. பெய்ஜிங்கிலிருந்து ஷாங்காய்க்கு செல்ல சுமார் 20 மணி நேரம் தேவைப்பட்டது. தற்போது, இருப்புப் பாதை, நெடுஞ்சாலை, பயணியர் விமானம் ஆகியவை மக்களின் போக்குவரத்துக்கு வசதி வழங்குகின்றன. விமானம் மூலம் இவ்விரு மாநகரங்களுக்கிடையிலான பயண நேரம் 2 மணி நேரத்துக்குள்ளாகக் குறைக்கப்பட்டது.

1 2 3