• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-03 09:26:13    
வேகமாக வளர்ந்து வரும் அறிவியல் தொழில் நுட்பம்

cri

1978ம் ஆண்டின் வசந்த காலத்தில், நடைபெற்ற சீனத் தேசிய அறிவியல் மாநாட்டில், அறிவியல் தொழில் நுட்பம் ஒரு உற்பத்தி ஆற்றலாகும் என்ற புகழ்பெற்ற தத்துவத்தை, சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையின் வடிவமைப்பாளர் Deng xiaoping முன்வைத்தார். அறிவியல் தொழில் நுட்பம் சீனச் சமூக மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான உந்து விசையாகவும் தூணாகவும் திகழ்கின்றது என்று அண்மையில் சீனத் தலைமை அமைச்சர் வென் சியாபாவ் சீன அறிவியல் தொழில் நுட்பப் பணிக் கூட்டத்தில் கூறினார். சீனா உலகின் முன்னேறிய அறிவியல் தொழில் நுட்ப ஆய்வில் ஈடுபட்டு, அடிப்படை மற்றும் பொது நலத் தன்மை வாய்ந்த அறிவியல் தொழில் நுட்ப ஆய்வு திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வென் சியாபாவ் கூறினார். அவர் கூறியதாவது

புதிய உயர் தொழில் நுட்பம் படைத்த தொழில்கள், உயிரின வாழ்க்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு உணவுப் பொருள் பாதுகாப்பு, உற்பத்தி பாதுகாப்பு முதலிய முக்கிய துறைகளிலான அறிவியல் தொழில் நுட்ப ஆய்வை வலுப்படுத்த வேண்டும். உலகின் தலைசிறந்த அறிவியல் தொழில் நுட்பக் கனிகளை உட்புகுத்தி, சீனாவின் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியை விரைவுப்படுத்துவதற்கு உயிராற்றலை ஊட்ட வேண்டும் என்றார் அவர்.


1 2 3