• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-03 09:26:13    
வேகமாக வளர்ந்து வரும் அறிவியல் தொழில் நுட்பம்

cri

அதேவேளையில், எதிர்கால கார் என்று அழைக்கப்பட்ட ஒரு வகை புகிய போக்குவரத்து வசதி மக்களின் வாழ்க்கையில் அறிமுகமாகியுள்ளது. இது மின்னாற்றல் மூலம் இயங்கும் வண்டி ஆகும். தற்போது, பெய்ஜிங், வூ ஹான், தியேன் ச்சின், வெய் காய் முதலிய நகரங்களின் மக்கள் சீனாவால் ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட இத்தகைய மின்னாற்றல் பேருந்து மூலம் பயணம் செய்கின்றனர். பெட்ரோலியத்திற்குப் பதிலாக மின்னாற்றல் மூல வண்டிகள் ஓடும் போது மிக குறைவான மாசுப்பொருளை வெளியேற்றுகின்றன. பெய்ஜிங் நகரவாசி Su xiu min அம்மையார் கூறியதாவது

மின்னாற்றல் பேருந்து மூலம் பயணம் செய்வதற்கும் பெட்ரோலியத்தைப் பயன்படுத்திய பேருந்து மூலம் பயணம் செய்ததற்கும் இடையில் அதிக வேறுபாட்டை உணரவில்லை. ஆனால், மின்னாற்றல் பேருந்துகள் வெளியேற்றிய மாசுப்பொருள் அளவு தெளிவாக குறைந்துள்ளது. மேலும் அதிக மின்னாற்றல் வண்டிகளைப் பயன்படுத்தினால், பெய்ஜிங்கின் காற்று தரம் மேலும் சிறப்பாக மாறும் என்றார் அவர்.

பல வசதிகளைக் கொண்ட எண்ணியல் தொலைக்காட்சிப் பெட்டி, உயர் திறனுடைய கணிணி, எண்ணியல் நிழற்படக் கருவி, செல்லிடபேசி முதலியவற்றின் பரவலுடன், சீன மக்களின் வாழ்க்கை தகவல் மயமாக்கக் காலத்தில் நுழைந்துள்ளது.

தற்போது, சீனாவில் இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 25 கோடியாகும். தகவல்களை அறிவது, பொழுதுபோக்கு, பணி புரிவது, நண்பர்களை அணுகுவது முதலியவற்றுக்கான முக்கிய வசதியாக இணையம் மாறியுள்ளது.

தவிர, இணையத் தொழில் நுட்பம் அரசின் பொது சேவை ஆற்றலை மேம்படுத்துவதிலும் மென்மேலும் அதிகமாகப் பயன் தருகின்றது. எடுத்துக்காட்டாக, 4 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய கிராமப்புற இடைநிலை மற்றும் துவக்கப் பள்ளி மாணவர்களுக்கான தொலை தூர கல்வி திட்டப்பணி, தற்போது, சீனாவின் 80 விழுக்காட்டு கிராமப்புற பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கணிணி மற்றும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி வலைப்பின்னல் மூலம், கிராமப்புற மாணவர்களும் பல்லூடக வடிவத்தின் மூலம் புகழ்பெற்ற ஆசிரியர்கள் வழங்கிய பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும். குவாங் துங் மாநிலத்தின் ஹுய் சாய் வட்ட துவக்கப் பள்ளியில் பயில்கின்ற மாணவர் லீ சியாங் கூறியதாவது  

வகுப்பில் திரைப்படத்தைக் கண்டுரசிப்பது போல் படம் கற்கின்றோம். ஒளி மற்றும் ஒலி மூலம் வழங்கிய பாடங்கள் மிகவும் அருமை என்றார் அவர்.

1 2 3