வீரர் முதல் House of Flying Daggers வரை, The Forbidden Kingdom முதல் சிவப்பு மலைப்பாறை வரை, உள்நாட்டில் மிக உயர் நிலையிலான திரைப்படத் தயாரிப்புக் குழுக்களில் Gan Lu தங்கியிருந்து, அந்தத் திரைப்படங்கள் பற்றியும் திரைப்படத் துறையினர் பற்றியும் நெருங்கிய தூரத்தில் செய்தி விளக்கப்படங்கள் எடுத்துள்ளார். இதனால் அவரைப் பற்றி பலர் அறிந்து கொண்டுள்ளனர். அந்தத் திரைப்படங்கள் வரவேற்கப்பட்ட அளவு படிப்படியாக குறைவதற்கு மாறாக, Gan Lu எடுக்கும் செய்தி விளக்கப்படங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அவரது செய்தி விளக்கப்படங்கள், திரைப்படம் பற்றிய பிரச்சாரத்தை நிறைவு செய்யும் திரைக்குப் பின்னே நிகழ்ந்தவற்றின் பார்வையாக மட்டுமல்ல, அவர் கடைபிடிக்கும் இதர படைப்புகளைப் போல், மக்களது கனவு மற்றும் விருப்பத்துடனான போட்டியும், முழுமூச்சுடன் ஒரு செயலை நிறைவேற்றி வாழ்க்கையை நடத்தும் போக்கும் கவனமாக பதிவு செய்யப்படுகின்றன.
1 2 3
|