• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-06 09:41:08    
செய்தி விளக்கப்படம் எடுக்கும் Gan Lu

cri

1999ஆம் ஆண்டு, பெய்ஜிங் திரைப்படப் பல்கலைக்கழகத்தில் Gan Lu கல்வி பயன்றார். எதேச்சையான ஒரு வாய்ப்பினால், புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் Zhang Yimou அவருக்குப் பேட்டி அளித்தார். உணர்வுப்பூர்வமான அவர், பேட்டியின் படத்தை தயாரித்த பின், பிரதி ஒன்றை Zhang Yimouவுக்கு வழங்கினார். பின்னர் அவருடன் Zhang Yimou தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, அவரது திறனை பாராட்டினார். வீரர் என்ற திரைப்படம் பற்றியும், பின்னர் Zhang Yimou பிடிக்கும் அனைத்து படைப்புகள் மற்றும் பணிப் போக்கு பற்றியும் அவர் செய்தி விளக்கப்படம் எடுப்பதற்கு இதுவே காரணமாகும்.

மிக உயர் நிலையான சீனத் திரைப்படங்களுக்காக அவர் செய்தி விளக்கப்படங்களைப் பதிவு செய்யும் கதவு இதனால் திறக்கப்பட்டுள்ளது. அவரது அனுபவங்களால், புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்களும், பெரிய திரைப்படத் தயாரிப்புக் குழுக்களும் அவரைக் கண்டுபிடித்து, அவர்கள் பிடிக்கத் துவங்கிய திரைப்படங்களுக்காக செய்தி விளக்கப்படத்தை எடுக்கச் செய்கின்றனர். புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் John Woo அவர்களில் ஒருவர். சிவப்பு மலைப்பாறை திரைப்படத் தயாரிப்புக் குழுவில் Gan Lu தடையின்றி வேலை செய்யலாம். ஆனால், மற்றவரால் மெச்சி பாராட்டப்பட்ட அனுபவங்களைக் கொண்ட அவர் பெருமை அடையவில்லை. உரிய தருணத்தில் மக்களில் ஒருவராக ஒன்று கலக்க வேண்டும் என்று அவர் தெரிந்து கொண்டுள்ளார்.


1 2 3