
 திபெத்தின் ஜனநாயகச் சீர்திருத்தத்தின் பொன்விழா தொடர்பான கண்காட்சி, பிப்ரவரி 24ம் நாள், பெய்ஜிங் தேசிய இனப் பண்பாட்டு மாளிகையில், அதிகாரப்பூர்வமாகவும் இலவசமாகவும் திறந்து வைக்கப்பட்டது. இது, சீனாவில் திபெத்தின் ஜனநாயகச் சீர்திருத்தத்தை மையமாக கொண்ட முதலாவது பெரிய ரகக் கண்காட்சியாகும். கடந்த நாட்களில், மிக பல மக்கள் பல்வேறு இடங்களிலிருந்து இங்கே வந்து, இக்கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
திபெத் பற்றி, மேலதிக அளவில் அறிந்து கொள்வதற்காகவும், திபெத் பற்றிய நிகழ்ச்சியை மேலும் சிறப்பாக தயாரித்து, நேயர்களிடம் உண்மையான திபெத்தை அறிமுகப்படுத்துவதற்காகவும், சீன வானொலி நிலையத்தின் தமிழ்ப் பிரிவின் பணியாளர்கள் அனைவரும், மார்ச் 2ம் நாள், பெய்ஜிங் தேசிய இன பண்பாட்டு மாளிகைக்குச் சென்று, இக்கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
இங்கு காட்சிக்கு வைக்கப்பட்ட ஏராளமான நிழற்படங்கள், பொருட்கள், வரலாற்றுப் பதிவேடுகள் ஆகியவற்றின் மூலம், திபெத்தில் ஜனநாயகச் சீர்திருத்தம் நடைபெற்ற கடந்த 50 ஆண்டுகளில் திபெத் பெற்றுள்ள சாதனைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில், திபெத் இன மக்கள் உரிமையாளர் என்ற முறையில், சோஷலிசத்தைக் கட்டியமைத்து, இன்பமான வாழ்க்கையை உருவாக்குவதில் காட்டிய உற்சாகம், நிழற்படங்களிலிருந்து உணரப்படலாம். வளர்ச்சியடைந்துள்ள, உண்மையான திபெத் பற்றி, உலக மக்கள் அனைவரும் நன்றாக அறிந்து கொள்வதற்கு, இது துணை புரியும்.
1 2 3
|