

இக்காட்சியரங்கில், பழைய திபெத்தில் முதலாளிகள் தங்களது அடிமைகளைத் திட்டி அடிப்பதை விளக்கும் சில நிழற்படங்கள் காணப்பட்டன. தமிழ் பிரிவின் நிபுணர் கிளீட்டஸ் இந்த நிழற்படங்களைக் கண்ட பின், இக்கண்காட்சியைப் பார்வையிட்ட இத்தாலிப் பிரிவின் செய்தியாளர் ஒருவர் அவரை பேட்டிகண்டார். திபெத்தில் மனித உரிமை பற்றிய கேள்விக்கு, கிளீட்டஸ் பதிலளித்ததாவது,
1959ம் ஆண்டு, திபெத்தில் ஜனநாயகச் சீர்திருத்தம் நடைபெற்ற பின், திபெத் இன மக்களின் வாழ்க்கையில் அதிக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இக்காட்சியரங்கு பற்றி, பல ஆண்டுகளாக பெய்ஜிங்கில் வாழ்கின்ற, ஷான்துங் மாநிலத்தைச் சேர்ந்த திரு கோங், கூறியதாவது,
திபெத்தில் ஜனநாயகச் சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்த கடந்த 50 ஆண்டுகளில், திபெத் பெரிதும் வளர்ந்துள்ளது. முன்பு, திபெத் இன மக்களின் வாழ்க்கை மிகவும் வறுமையாக இருந்தது. திபெத் அமைதியாக விடுதலை பெற்றதுடன், அவர்கள் இன்பமாக வாழ்கின்றனர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நடுவண் அரசு அவர்களுக்கு அன்பு மற்றும் கவனிப்பு, போற்றுதற்குரியது என்று அவர் கூறினார். 1 2 3
|