
 இரண்டாம் காட்சியரங்கில், வெண்ணெய் தேனீர், பார்லி, டாங்கா முதலிய திபெத் இனத் தனிச்சிறப்பு வாய்ந்த பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கண்ட பின், திபெத்திற்குச் சென்ற அனுபவம் கொண்ட தமிழ்ப் பிரிவின் பணியாளர் மதியழகன் எங்களிடம் கூறியதாவது,
2007ம் ஆண்டின் ஆகஸ்டு திங்களில், நான், திபெத்தில் சுற்றுலா பயணம் மேற்கொண்டேன். 2 வாரங்கள் அங்கே தங்கி இருந்த போதில், நான் கண்டுணர்ந்த திபெத்தின் பல்வேறு துறைகள் எனது மனதில் ஆழப்பதிந்துள்ளன. குறிப்பாக, திபெத்தின் ஆழகான இயற்கை காட்சிகள், தரமான காற்று மற்றும் தெளிவான வானம் முதலியவை மறக்க முடியாதவை. தவிர, Potala மாளிகை உள்ளிட்ட தொன்மை வாய்ந்த கட்டிடங்கள் மற்றும் பல்வேறு தொல்பொருட்களை திபெத் கொண்டுள்ளது. இவற்றை பார்வையிடச் சென்ற போது, இத்தொல் பொருட்கள் பயன்தரும் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொண்டேன். Potala மாளிகையை பார்வையிட்ட போது, உள்ளூர் மக்கள் பலர், மாளிகையில் முன்னேயுள்ள சதுக்கத்தில் சுதந்திரமாக வழிபாடு செய்வதாக காண முடிந்தது.
1 2 3
|