

தற்போது, திபெத்தின் போக்குவரத்து வசதியாக இருக்கிறது. விமானம், தொடர்வண்டி முதலியவற்றின் மூலம், திபெத்திற்கு செல்லாம். கடந்த பல ஆண்டுகளில் திபெத்தில் அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தால், தற்போது, சீன மற்றும் வெளிநாடுகளின் பயணிகள் திபெத்தில் மிக வசதியாக சுற்றுலா மேற்கொள்ள முடிகிறது.

திபெத்தில் ஜனநாயகச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட 50வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வேளையில், இக்கண்காட்சியை பார்வையிட்ட பின், திபெத் வரலாற்றை மேலும் விபரமாக புரிந்து கொள்ள முடிந்தது. 50 ஆண்டுகளுக்கு முன்பு, திபெத்தில் நடைமுறையிலிருந்த நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறை என்பது மகி கொடுமையானது. அந்த ஆட்சியில், அடிமை மக்களுக்கு அடிப்படை மனித உரிமை ஏதும் இல்லை. அவர்கள், பின்னடைவு மற்றும் இருளான சமூக நிலையில் வாழ்ந்தனர். நடுவண் அரசு திபெத்தில் ஜனநாயகச் சீர்திருத்தத்தை செயல்படுத்திய பின், அடிமைகள் விடுதலை பெற்றனர்.
1 2 3
|