 மூன்றாவது காட்சியரங்கின் ஒரு பகுதியிலான நிழற்படங்கள் மற்றும் பொருட்கள், மார்ச் 14ம் நாள் சம்பவத்தின் உண்மையான நிலவரங்களை வெளிப்படுத்தின. இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஒளிப்பதிவை அங்கிருந்த தொலைக்காட்சிபெட்டியில் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் சிலர், முகத்தை கோபத்தில் இறுக்கி, பற்களை கடித்ததை காண முடிந்தது. அமைதியான, இன்பமான வாழ்க்கையைச் சீர்குலைத்த தலாய் லாமாக் குழுவின் செயல்பாடு குறித்து, இந்த ஒளிபரப்பை கண்ட பின், மக்கள், கோபத்தை எழுப்பினர்.

இந்தக் காட்சியரங்கின் வேறு ஒரு பகுதியில், தற்போதைய திபெத் இன மக்களின் கல்வி, பணி, வாழ்க்கை முதலியவற்றிலான மாற்றங்களைக் காட்டும் நிழற்படங்களும் தகவல்களும் பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. திபெத் இன மக்கள் பயன்படுத்திய செல்லிடபேசிக்கான அலமாரிக்கு அருகில், பார்வையிட இங்கு சிறப்பாக வந்த திபெத் இன இளைஞர் ஒருவரை நாங்கள் சந்தித்தோம்.
1 2 3
|