
நான் சிங்காயைச் சேர்ந்த திபெத் இனத்தவர். ஆண்டுதோறும் நான் திபெத்திற்குச் செல்கின்றேன். எனது குடும்பத்தினரில் சிலர் அங்கு வாழ்கின்றனர். திபெத்தில் அதிகமான மாற்றங்கள் காணப்பட்டன. முன்பை விட, தற்போதைய வாழ்க்கை சிறப்பாக இருக்கிறது என்றார் அவர்.
திபெத்தின் மாற்றங்கள் பற்றி குறிப்பிடும் போது, திபெத்தை விடுதலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு, அங்கு 5 ஆண்டுகள் தங்கியிருந்த முதியவர் Cui Guangchuan, கருத்து தெரிவித்தார். அன்று, அவர் துணைவியாரை அழைத்து, இக்கண்காட்சிக்கு வந்து, திபெத்தின் கடந்த 50 ஆண்டுகால வளர்ச்சியைப் பார்த்தார்.
1 2 3
|