• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-09 16:15:01    
சீனப் பொருளாதாரத்தின் எதிர்காலம்மீதான நம்பிக்கை

cri

வேளாண், கிராமப்புறம் மற்றும் விவசாயிப் பிரச்சினைகள்

2008ம் ஆண்டு சீன நடுவண் நிதி துறை வேளாண்மை, கிராமப்புறம், விவசாயி ஆகிய துறைகளுக்கு 59 ஆயிரத்து 550 கோடி யுவானை ஒதுக்கியது. இது 2007ம் ஆண்டில் இருந்தததை விட 16 ஆயிரத்து 370 கோடி யுவான் அதிகமாகும். அதிகரிப்பு விகிதம் 37.9 விழுக்காடாகும்.

மார்ச் 5ம் நாள் காலை பெய்ஜிங்கில் துவங்கிய 11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத் தொடரின் துவக்க விழாவில் சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் அரசு பணியறிக்கையை வழங்கிய போது இந்த விபரங்களை வெளிப்படுத்தினார். கடந்த ஓராண்டில் சீன அரசு இந்த வேளாண், கிராமப்புறம் மற்றும் விவசாயிப் பிரச்சினைகளின் தீர்வுப் பணியை விரைவுபடுத்தியுள்ளது. வழங்கப்பட்ட பல்வகை மானியத் தொகை 10 ஆயிரத்து 300 கோடி யுவானைத் தாண்டியது. 2007ம் ஆண்டில் இருந்ததை விட இது ஒரு மடங்கு அதிகரித்தது என்று தலைமை அமைச்சர் வென்சியாபாவ் கூறினார்.

விவசாயிகளின் உற்சாகத்தை பாதுகாத்து அணித்திரட்டுவது, முக்கிய வேளாண் உற்பத்திப் பொருட்களின் விநியோகத்தை உத்தரவாதம் செய்வது, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு வேளாண், கிராமப்புறம் மற்றும் விவசாயிப் பிரச்சினை தொடர்பான சீன அரசின் கொள்கை நடவடிக்கைகள் முக்கிய பங்கு ஆற்றியுள்ளன. சமூகப் பொருளாதார வளர்ச்சியை நிதானப்படுத்துவதற்கு இந்த கொள்கை நடவடிக்கைகள் பெரிதும் ஆதரவு வழங்கியுள்ளன என்று வென்சியாபாவ் பணியறிக்கையில் குறிப்பிட்டார்.

1 2 3 4