விளைநிலத்துக்கான விவசாயக் குடும்ப ஒப்பந்த முறை
இப்போது சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறுகின்ற சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியின் கூட்டத் தொடரில் மாநாட்டின் உறுப்பினரும் ஹெலுங்சியாங் மாநிலத்தின் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தலைவருமான வான் ச்சியு லூ குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது விவசாயக் குடும்ப ஒப்பந்த முறை குறித்து கருத்து தெரிவித்தார். வேளாண் துறையின் நவீனமயமாக்கம் விரைவாக முன்னேறுவதுடன் விளைநிலத்துக்கான விவசாயக் குடும்ப ஒப்பந்த முறை கிராமப்புறங்களில் உற்பத்தியாற்றல் உயர்வதைக் கட்டுப்படுத்தி வருகின்றது.
இந்த ஒப்பந்த முறையின் நிர்வாக உரிமையின் பரிமாற்றத்தைச் செவ்வனே செய்து தொழில் நுடத்துவதன் நிர்வாகத்தை பெருமளவில் முன்னேற்றுவது பெரியரக இயந்திறங்களின் பயன்பாட்டை வெளிக்கொணர்வதற்கும் விளைநிலப் பயன்பாடு மற்றும் வேளான் உற்பத்தி விகிதத்தை உயர்த்துவதற்கும் துணைபுரியும் என்று அவர் கூறினார்.
வேளாண்துறையில் நடுவண் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கும் அதேவேளையில் விவசாயிகள் கொண்டுள்ள நிலமூலவளத்தின் மதிப்பை விளைநிபப் பரிமாற்றத்தில் அதிகரிப்பதை உற்சாகத்துடன் ஆராய வேண்டும். இத்துறையில் உள்ளார்ந்த ஆற்றல் அதிகம் என்று அவர் கூறினார்.
1 2 3 4
|