• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-09 16:15:01    
சீனப் பொருளாதாரத்தின் எதிர்காலம்மீதான நம்பிக்கை

cri

விளைநிலத்துக்கான விவசாயக் குடும்பத்தின் ஒப்பந்த முறை

சீனாவில் நடைமுறைக்கு வந்துள்ள விளைநிலத்துக்கான விவசாயக் குடும்பத்தின் ஒப்பந்த முறையில் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படுகின்ற நிலங்களை கொள்வது, பயன்படுத்துவது, விளைச்சலைப் பெறுவது மற்றும் கையாள்வதற்கு விவசாயிகளுக்கு உரிமை உண்டு. சட்டம், தன் விருப்பம், விற்பனை ஆகியவற்றின் முன்நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்கள் விளைநிலத்தை பரிமாறிக் கொள்ளலாம். இந்த கொள்கை 1984ம் ஆண்டில் வெளியிடப்பட்ட சீன நடுவண் அரசின் முதலாவது இலக்க ஆவணத்தில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. 2003ம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த "கிராமப்புறங்களில் விளைநிலத்துக்கான விவசாயக் குடும்பத்தின் ஒப்பந்த முறை தொடர்பான சீன மக்கள் குடியரசின் சட்டத்தில்"இது பற்றிய விளக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வொப்பந்த முறையின் படி விளைநிலத்தை பரிமாறிக் கொண்டு பயன்படுத்தும் அமைப்பு முறை அடிப்படையில் உருவாகியது என்று சட்டம் காட்டியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் கிராமப்புறங்களிலிருந்து வெளியேறிய விவசாயிகள் நகரங்களில் பணிபுரியும் வாய்ப்பு மற்றும் நவீன வேளாண் துறையின் வளர்ச்சி அதிகரித்ததுடன் கிராமப்புறங்களில் விளைநிலத்துக்கான விவசாயக் குடும்பத்தின் ஒப்பந்த முறையை நடத்தும் உரிமையை பரிமாறிக் கொள்ளும் தேவை மேலும் அவசரமாகியுள்ளது. இதை நிறைவேற்றினால் வேளாண் துறையின் நிதான வளர்ச்சிக்கும் விவசாயிகள் தொடர்ந்து வருமானத்தை அதிகரிப்பதற்கும் அது துணை புரியும். அதேவேளையில் விளைநிலங்களை பாதுகாப்பதிலும் நிலத்தின் பயன்பாடு மாறாமல் இருப்பதிலும் கவனம் செலுத்தப்படும்.

2009ம் ஆண்டு பிப்ரவரி முதல் நாள் வெளியிடப்பட்ட நடுவண் அரசின் முதலாவது இலக்க ஆவணத்தில் விளைநிலத்துக்கான விவசாயக் குடும்பத்தின் ஒப்பந்த முறை தொடர்பான உரிமையை பரிமாறிக் கொள்ளும் சந்தை முழுமையாக்கப்பட வலியுறுத்தப்படுகின்றது.


1 2 3 4