• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-09 16:26:15    
தற்சார்பில் சீனாவின் வளர்ச்சி

cri

உலக நாடுகள், தங்களிடம் இல்லாத பொருட்களையும், உணவு வகைகளையும், அவற்றை ஏற்றுமதி செய்யக்கூடிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து தேவையை நிறைவு செய்கின்றன. அதேவேளையில், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் உற்பத்தியில் தன்னிறைவு அடையும் நோக்கோடும் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக உயர் தொழில் நுட்ப பொருட்களை தற்சார்பாக, தங்களது நாட்டிலே தயாரிக்க ஏறக்குறைய எல்லா நாடுகளும் ஆய்வு செய்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இத்தகைய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், சர்வதேச அளவில் பெருமை கிடைப்பதோடு, வர்த்தக வாய்ப்புகளும் அதிகரிக்கும். இது தொடர்பாக, சீனாவின் விமான தயாரிப்புத் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

விமானப்பயணம் என்பது மேல்மட்ட மக்களுக்கு மட்டுமே சொந்தமானது என்ற நிலைமாறி அனைவருக்குமானது என்ற நிலை உருவாகியுள்ளது. இது விமான தயாரிப்பு தொழில்துறையின் வளர்ச்சி வாய்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில், சீனாவால் தற்சார்பாக தயாரிக்கப்பட்ட உள்நாட்டு பயணியர் விமானம் ARJ21-700, தன்னுடைய முதல் விமானப் பயணத்தை ஷாங்காயில் கடந்த வெள்ளிக்கிழமை வெற்றிகராமாக நடத்தியுள்ளது என்று சீன தேசிய விமான வணிகக்கழகம் தெரிவித்தது. ARJ21 ரக விமானம் என்றால் 21 ஆம் நூற்றாண்டின் முன்னேறிய நுட்பங்களுடன் கூடிய உள்நாட்டு விமானம் என்று பொருள்படுகின்றது. ஷாங்காய் விமான தயாரிப்பு ஆலையில் சுமார் ஒரு மணிநேரம் பறந்த அவ்விமானத்தில், மூன்று விமானிகள் பயணம் செய்தனர். வெள்ளோட்ட விமானப் பயணத்திற்கு பிறகு, அந்த விமானம் பிற விமானங்களை போலவும், சீராகவும் இருப்பதாக மூன்று விமானிகளில் ஒருவரான Zhao Peng தெரிவித்தார்.

1 2 3