• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-09 16:26:15    
தற்சார்பில் சீனாவின் வளர்ச்சி

cri

சீன தேசிய விமான வணிகக் கழகத்தின் தாய் நிறுவனமான சீன தேசிய விமான தயாரிப்பு தொழில் நிறுவனம், விமானங்கள் தயாரிப்பு தொழிலில் உள்ள எதிர்கால வாய்ப்பபை மதிப்பிட்டுள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் 6,600 உள்நாட்டு விமானங்கள் தேவைப்படும் என்றும் அதில் 70 விழுக்காடு Jet எனப்படும் சிறியரக விமானங்களாகத் தான் இருக்கும் என்றும் அது மதிப்பிட்டுள்ளது. ஏறக்குறைய எல்லா சீனப் பயணியர் விமான நிறுவனங்களும், இதுவரை 140 இருக்கைகள் கொண்ட விமானங்களை தான் குறுகிய மற்றும் அதிக தொலைவில்லாத வான்வழி பயணங்களுக்கு பயன்படுத்துகின்றன. குறைந்த எரியாற்றல் செலவில் நீண்டதூர பயணம் என்ற சிறப்பை கொண்டுள்ள ARJ21 ரக விமானம், தற்போது ஆகின்ற 8 முதல் 10 விழுக்காடு பயணச் செலவை குறைக்கும் என்று சீன தேசிய விமான வணிகக் கழகத்தின் பொது மேலாளர் Jin Zhuanglong தெரிவித்தார்.


1 2 3